நடிகர் ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமண ஆல்பம்

ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கமல்ஹாசன், சாந்தனு, அதர்வா, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், ஸ்ருதி ஹாசன், கஸ்தூரி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

×Close
×Close