மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மறுபடியும் இணைகிறது.

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மறுபடியும் இணைகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமான படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ‘கயல்’ ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படம், பலரது எதிர்ப்புகளைப் பெற்றது. அதேசமயம், வசூலையும் வாரிக் குவித்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். படம் எடுக்கும்போது ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டதால், இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடப் போகிறோம் என்று அறிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படம் ஊத்திக் கொண்டதால், இரண்டாம் பாகம் கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தன்னுடைய முதல் பட நாயகனான ஜி.வி.பிரகாஷை மறுபடியும் இயக்க இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படம், 3டியில் உருவாக இருக்கிறது. ஃபேண்டஸி லவ் ஸ்டோரியாக இந்தப் படத்தை எடுக்கிறார் ஆதிக்.

×Close
×Close