மணிரத்னத்தின் புதிய படத்தில் சிம்பு: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக, நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக, நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor simbu, actress jyothika, director mani ratnam, ,

இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக, நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Advertisment

இயக்குநர் மணிரத்னம் கடைசியாக ’காற்று வெளியிடை’ திரைப்படத்தை இயக்கினார். இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரித்தது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒருபுறத்திலிருந்து இந்த படத்திற்கு பாராட்டுகள் எழுந்தபோதும், பெரும்பான்மையாக இப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மணிரத்னம் தன் அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளியானதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதில், நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியை அவர்களுக்கு அளித்தது.

நடிகை ஜோதிகா சமீப காலமாக பெண்களை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த 36 வயதினிலே திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநர் பிரம்மா இயக்கிய ‘மகளிர் மட்டும்’ வரும் 15-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதேபோல், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ‘நாச்சியார்’ திரைப்படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்நிலையில், மணிரத்னத்தின் படத்தில் ஜோதிகா இணைந்ததில் அவரது ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், மணிரத்னத்தின் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சிம்பு கடைசியாக நடித்த ’அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ திரைப்படம் கடும் தோல்வியை அடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படத்தில் சிம்பு இணைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, ஃபகத் ஃபாசில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடைசியாக என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. இந்த படம் குறித்து இப்போது நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால், மணிரத்னத்தின் முந்தைய திரைப்படங்களை விட இத்திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி”, என கூறினார்.

படக்குழுவில் உள்ளவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: