scorecardresearch

சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் சந்தீப் கிஷன் – மெஹ்ரீன்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து, சந்தீப் – மெஹ்ரீன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் சந்தீப் கிஷன் – மெஹ்ரீன்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், மெஹ்ரீன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக விக்ராந்த் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த மெஹ்ரீன், நானி ஜோடியாக தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் நடித்த இரண்டு தெலுங்குப் படங்களும் ஹிட்டாக, ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவரை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் சுசீந்திரன்.

இந்தப் படத்தில், ஜனனி என்ற கேரக்டரில் காலேஜ் படிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார் மெஹ்ரீன். அவருக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று ஆசையே இல்லையாம். தான் நடிக்க வந்தது விபத்துதான் என்கிறார் அவர். மாடலிங்கில் இருந்து விளம்பரப் படத்தில் நடித்தவரை, எப்படியோ சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டனர்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து, சந்தீப் – மெஹ்ரீன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தையும் சுசீந்திரனே இயக்குகிறார். தற்போது புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ படத்தை இயக்கிவருகிறார் சுசீந்திரன்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: After nenjil thunivirundhal sundeep kishan again pair with mehreen