வழக்கம்போல் ஆப்சென்டான அஜித்

அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி, நேற்று பூஜை போட்டுள்ளனர். ஆனால், இந்த பூஜைக்கு கூட வராமல் தவிர்த்துள்ளார் அஜித்.

தான் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அஜித், பூஜைக்கு கூட வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளார்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ‘விசுவாசம்’ படத்தை இயக்க இருக்கிறார் சிவா. ‘விவேகம்’ படம் தோல்வியைத் தழுவியதால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். வழக்கம்போல் வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கலாம் என்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளனர். அதேபோல, கடந்த இரண்டு படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்குப் பதிலாக, இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கலாம் என்கிறார்கள்.

ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம். அடுத்த ஆண்டு தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், படத்துக்கான ஆபீஸ் போட்டு ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளார் சிவா. அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி, நேற்று பூஜை போட்டுள்ளனர். ஆனால், இந்த பூஜைக்கு கூட வராமல் தவிர்த்துள்ளார் அஜித்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close