அஜித் எந்த அரசியல் இயக்கத்தையும் சேராதவர் : வக்கீல் மூலம் அறிக்கை

நடிகர் அஜித் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர். அவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள் பக்கங்கள் இல்லை என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர். அவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள் பக்கங்கள் இல்லை என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் சார்பில், அவரது சட்டஆலோசகர் பரத் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ’25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்துவரும் எனது கட்சிக்காரர் அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர். தனிப்பட்ட முறையில் நிறையப் பேருக்கு உதவுபவர். இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும் குடிமகன்.

அவர், எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர் அல்ல.
வர், தனது ஜனநாயகச் சிந்தனைகளை அவரது ரசிகர்களின் மீதும் பொதுமக்கள் மீதும் திணிக்காதவர். அவர், எந்தப் பொருளையும் வணிகச் சின்னத்தையும், நிறுவனத்தையும் அமைப்பையும், சங்கத்தையும் தற்போது நேரடியாகவோ மறைமுகவோ, சார்ந்தவரோ… ஆதரிப்பவரோ இல்லை.அவர், அவரது வளர்ச்சிக்கு ஊக்கத் துணையாக இருந்த ரசிகர்களுக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்.

அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்ற ஒன்று இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அவருக்கு, அதிகாரபூர்வமான வலைப் பக்கம், எந்தச் சமூக வலைதளத்திலும் இல்லை. குறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்நாப்சாட் போன்ற இணையத்தில் இல்லை. ஆனால், சில தனிப்பட்ட சுய அதிகாரம்கொண்ட அமைப்புகள், தனிநபர்கள், தங்களுடைய கருத்துகளை அஜித்குமாரின் கருத்தாகப் பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அஜித்குமாரின் பெயரையும் புகைப்படத்தையும் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அஜித்குமார் சார்ந்த திரைத்துறையையும் தனி நபர்களையும், செய்தியாளர்களையும் பொதுமக்களையும்கூட சமூக வலைதளங்களில் வன்மமாகப் பேசிவருகிறார்கள். அந்தச் சம்பவம், அஜித்குமாருக்கு மன உளச்சலைத் தருகிறது. அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இத்தகைய செயலால் பாதிக்கப்பட்ட எல்லாரிடமும் அஜித்குமார் மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறார்’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவேகம் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிக்கை அவரது ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close