டுவிட்டர் எனும் கலவர பூமியில் நடிகர் தல அஜித் குமார் இணைய வேண்டும் என்ற இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கனவு நிறைவேறுமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
டுவிட்டர் என்பது எத்தனை பெரிய கலவர பூமி என்பது டுவிட்டரின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் டுவிட்டர், சீமான், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர்களின் டுவிட்டர் பக்கங்களின் பாலோயர்களாக உள்ள அனைவருக்கும் இது எத்தகைய கலவர பூமி என்பது தெரிந்திருக்கும்.
ரசிகர்களால் ‘ தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், படங்களில் நடிப்பது மட்டுமே தனது வேலை. மற்ற படங்கள் மட்டும் அல்லாமல், தனது படம் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் முதல், சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் வரை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்களில் கலக்கிக்கொண்டிருக்க, நடிகர் அஜித், இந்த தொடர்பு நீரோடையில் இருந்து தொடர்ந்து விலகியே இருக்கிறார்.
இதனிடையே, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், நடிகர் அஜித் குமார் டுவிட்டரில் இணைய வேண்டுமென டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, யார் யார் இதை வரவேற்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
I so badly want #thalaajith sir to join Twitter ???? anybody else feels the same ? ????????