"விவேகம்" படத்திற்கு 'UA' சான்றிதழ்! மகிழ்ச்சியில் 'தல' டீம்

சென்சாருக்குச் சென்ற 'விவேகம்' படத்திற்கு இன்று 'யு' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

சென்சாருக்குச் சென்ற 'விவேகம்' படத்திற்கு இன்று 'யு' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"விவேகம்" படத்திற்கு 'UA' சான்றிதழ்! மகிழ்ச்சியில் 'தல' டீம்

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர இருக்கும் படம் ‘விவேகம்’. 'ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்' , 'இது வேற லெவல் அஜித்' என ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளால் ரசிகர்களின் டெம்போவை போன்று நமக்கும் டெம்போ உச்சக்கட்டத்தில் உள்ளது.  அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், ஒரு முக்கியமான ரோலில் அக்ஷராஹாசனும் நடித்துள்ளனர். அதேபோல், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment

குறிப்பாக, இப்படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசும் வகையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் 'செர்ஜ்க்ரோசன்' விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவர் 'கேசினோ ராயல்' , '300' , 'தி டிரான்ஸ்போர்ட்டர் ரீ ஃபீயூல்ட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

publive-image

கடந்த மே மாதம் வெளியான இப்படத்தின் டீசர், இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்தது.

முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்தது. தற்போது வரை 5,16,206 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

Advertisment
Advertisements

அதேபோல், இதுவரை இப்படத்தின் "சர்வைவா" , "தலைவிடுதலை" , "காதலடா" ஆகிய மூன்று பாடல்களும் வெளியாகியுள்ளன. இந்த மூன்று பாடலுமே செம ஹிட். அஜித்தின் லுக்ஸ்களும் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதிலும், சமீபத்தில் வெளியான அஜித் லுக்ஸ் மரண மாஸ் ரகம்.

இந்நிலையில், சென்சாருக்குச் சென்ற 'விவேகம்' படத்திற்கு இன்று 'UA' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், இனி 'விவேகம்' ஃபீவர் தான்....

Anirudh Vivegam Siva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: