கடந்த மே மாதம் வெளியான ‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ பட டீசர், இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்தது. தற்போது வரை 5,16,590 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
அதேபோல், தெலுகு விவேகம் டீசரும் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 54,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. தெலுகில் வெளியான அஜித் பட டீசர்களிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற படம் விவேகம் தான்.
இந்நிலையில், “விவேகம்” படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்கு UA சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் விவேகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஒருவழியாக, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் திளைத்தாலும், படத்தைப் பார்க்க இன்னும் 24 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற சோகத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர்.
முன்னதாக, விவேகம் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியே ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது அந்த தேதியிலிருந்து மேலும் 14 நாட்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகியுள்ளது.
ஆனால், ரசிகர்களின் இந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில், விவேகம் படத்தின் டிரைலரை உடனடியாக வெளியிட இயக்குனர் சிவா