'வேதாளம்' போல் ஏமாற்றவில்லை: 'விவேகம்' டிரைலர் எப்போது? நாள், நேரம் நாளை அறிவிப்பு!

அதுபோன்று மீண்டும் ஒரு தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார் சிவா.

அஜித்தின் ‘விவேகம்’ ஃபீவர் இப்போது உச்ச நிலையில் உள்ளது. இப்படத்தின் ஸ்டில்களே படம் எந்த மாதிரியான லெவலில் இருக்கும் என்பதை காட்டுகிறது. என்னதான் புரமோஷனுக்காக அந்த படத்தைப் பற்றி டெக்னீஷியன்கள் உயர்வாக பேசினாலும், இதுவரை வெளியாகியுள்ள ஸ்டில்ஸ், டீசரை பார்க்கும் போது, படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த மே மாதம் வெளியான ‘விவேகம்’ டீசர், இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்தது. தற்போது வரை 5,26,172 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

‘விவேகம்’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்கு UA சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் விவேகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியிடப்படும் தேதி குறித்து நாளை விவேகம் படக்குழு அதிகாரப்பூவமாக அறிவிக்க உள்ளது. அநேகமாக வரும் வியாழன் அன்று விவேகம் டிரைலர் வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக சிவா – அஜித் கூட்டணியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த “வேதாளம்” படத்தின் டிரைலரை இறுதிவரை படக்குழு வெளியிடவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். அதுபோன்று மீண்டும் ஒரு தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார் சிவா.

அதுசரி…. விவேகம் படத்தின் டீசர் வியூஸ் நம்பர்ஸ் இப்போது எவ்வளவு தெரியுமா? 19,072,523…. ‘தல’ சுத்துதா!! இங்கயும் சேம் ஃபீலிங் தான்.

×Close
×Close