அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்: அணி திரண்டு வந்த பாலிவுட் பிரபலங்கள்!

ஆகாஷிற்கு ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே தெரியுமாம். இருவரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்

ஆகாஷிற்கு ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே தெரியுமாம். இருவரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்:   அணி திரண்டு வந்த பாலிவுட்  பிரபலங்கள்!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisment

உலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர்களில் ஒருவரான   முகேஷ் அம்பானியின் மகன்,  ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியும், பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகளுமான  ஸ்லோகா மேத்தாவை இந்த ஆண்டு இறுதியில் கரம் பிடிக்க இருக்கிறார்.

இவர்களின் திருமணம்  பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. இதனிடையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கோவா சென்ற அம்பானி குடும்பத்தினர், பெண் பார்க்கும் படலத்தை சத்தமே இல்லாமல்  செய்து முடித்தனர்.  அதன் பின்பு,  ஆகாஷ் அம்பானிக்கு ,  ஸ்லோகா மேத்தா உடன் இந்த ஆண்டு இறுதியில்  திருமணம் நடக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியது.

 

Advertisment
Advertisements

publive-image

அதன் பின்பு நேற்றைய தினமே, ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும்  கோவாவில் பிரமாண்டமாக நித்தயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு பிரபலகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தைத் தொடர்ந்து, இரவு நடந்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷாரூக்கான், கத்ரினா கைப், கரண் ஜோஹர், கிரிக்கெட் பிரபலங்கள் ஷாகிர்கான், ஹர்பஜன்சிங், ஜான் ஆபிரகாம், ஆமீர்  கான்மனைவி கிரண் ராவ் என பலர் கலந்துக் கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர்.

publive-image

ஆகாஷிற்கு ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே தெரியுமாம். இருவரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்.   ஸ்லேகாவின் தாய், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவர்.

 

publive-image

 

 

 

Akash Ambani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: