அப்பாவையும், ரஜினி அங்கிளையும் வச்சு படம் இயக்க ஆசை – அக்‌ஷரா ஹாசன்!

Akshara Haasan: நான் ஒரு நடிகையாக இருப்பது, சிறந்த மற்றும் வலுவான பெண்கள் கதாபாத்திரங்களை எழுத உதவும் என்று நம்புகிறேன்

Akshara Haasan love to direct a movie with Kamal haasan and Rajinikanth
அக்‌ஷரா ஹாசன்

எஸ்.சுபகீர்த்தனா

Akshara Haasan: அக்‌ஷரா ஹாசன் வழக்கமான நட்சத்திர குழந்தை அல்ல. மற்ற நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கும், அக்‌ஷராவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன வென்றால், அக்‌ஷராவை எளிதில் அணுகலாம், ட்வுன் டூ எர்த் பெர்சன், மிக முக்கியமாக, எந்த சூட்சுமத்தையும் அவர் கொண்டிருக்க மாட்டார். நம்மைப் போன்றே இயல்பாக பேசுவார், கண்ணியமாக பதிலளிப்பார். “என்னங்க” மற்றும் “ஆமாங்க” அவரது உரையாடலில் தெறித்து விழும்.

உதவி இயக்குநராக இருந்து நடிகையான, ஒருவரை நம்மால் தினமும் சந்திக்க முடியாது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடிப்பு மற்றும் இயக்கத்தை விரும்புவதைப் போலவே ’ப்ரூட் ஜாம்’ செய்து, அதை பதப்படுத்துவதிலும் காதல் கொண்டிருக்கிறார் அக்‌ஷரா. “நான் ஜாம் தாயாரிப்பாளரானது ஒரு ஆக்ஸிடெண்ட்” என புன்னகையை உதிர்க்கிறார். இதன் ட்ரிக்ஸே அவற்றை ப்ராசெஸ் செய்வதில் தான் உள்ளது எனும் அக்‌ஷரா, எப்போதாவது, இன்ஸ்டாகிராமில் எனது ஜாம் தயாரிப்பைப் பற்றி வெளியிடுவேன் என சிரிக்கிறார்.

கடைசியாக ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்திருந்த இவர், தனது அடுத்த பயணமாக, ‘Zee 5 Original’ல் வெளியாகும் ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சிரீஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் இந்த சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. ”நான் நிறைய ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெரிய அல்லது சின்னத்திரையைப் பொருட்படுத்தாமல், வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் எனது எண்ணம். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடித்தது நன்றாக இருந்தது, எனது அப்பாவின் தயாரிப்பு என்பதால் நான் இதைச் சொல்லவில்லை,  உண்மையைச் சொன்னால், நான் ஆரம்பத்தில் பயந்தேன். ’கடாரம் கொண்டான்’ என் வாழ்க்கையின் முக்கியமானப் படம்” என புன்னகைக்கிறார் அக்‌ஷரா.

‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்‌ஷரா, அந்தப் படத்தில் தான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறார். ஒரு வெற்றிகரமான படத்தின் அங்கமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்ட அக்‌ஷரா, “அது ஒரு அருமையான குழு, அதைப் பற்றிய இரண்டாவது கருத்துகளுக்கு இடம் இல்லை” என்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், வித்தியாசமான குரலும், கதையும் இருப்பதாக அக்‌ஷரா நம்புகிறார். “ஒவ்வொரு படத்திலும், நான் என்னைப் பற்றி ஏதாவது கற்றுக் கொள்கிறேன், இதை நான் நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

அக்‌ஷரா தேர்ந்தெடுத்து நடிப்பவரா? என்றதற்கு, “உண்மையில் இல்லை, நான் மென்மையானவள் என்று மக்கள் நினைக்கிறார்கள். போல்டான கதாபாத்திரங்களிலும், கடினமான கதாபாத்திரங்களிலும் நடித்து, என்னை நான் நிரூபித்தால் மட்டுமே அந்த எண்ணத்தை மாற்ற முடியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, எனக்கு கேமராவின் பின்னால் உள்ள விஷயங்களைப் பற்றி தெரியும். நான் ஒரு நடிகையாக இருப்பது, சிறந்த மற்றும் வலுவான பெண்கள் கதாபாத்திரங்களை எழுத உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

வெப் சிரீஸைப் பற்றி பேசுகையில், ’ஃபிங்கர்டிப்’ பார்வையாளர்களுக்கு இருக்கை நுனி அனுபவத்தைத் தரும் என உறுதியளிக்கிறார் அக்‌ஷரா. “தொழில்நுட்பம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது, உதாரணமாக சமூக வலைதளங்களில் போடும் ஒரு ஸ்டேட்டஸ் பல எதிர்மறை உணர்வுகளை தூண்டுகிறது, இது நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடும்’ என்கிறார்.

அக்‌ஷரா கதை எழுதவும் இயக்கவும் திட்டமிட்டுள்ளார். திரையில் “கமல்ஹாசனின் மகளாக” நடிப்பதே அவரது மிகப்பெரிய கனவு. அதோடு அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரையும் இயக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம்.

அக்‌ஷராவைப் பாதித்த படங்களின் பெயர்களை கேட்டபோது, கமல்ஹாசனின் வெற்றிப் படங்களை பட்டியலிடும் அவர், ”இதில் குறிப்பிட்ட ஒன்றை சொல்வது கடினம், ஆனால் அப்பா மற்றும் ரஜினி அங்கிளை வைத்து, ஒரு படத்தை இயக்க நான் விரும்புகிறேன்” என்று உற்சாகமாகிறார்!

இதை ஆங்கிலத்தில் படிக்க I’d love to direct a film with Appa and Rajini uncle: Akshara Haasan

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Akshara haasan to direct a movie with kamal haasan and rajinikanth

Next Story
ஆயுத எழுத்து: பள்ளிக் கூடத்துக்கு போனா பசங்க கெட்டு போயிருவாங்களாம், என்ன அநியாயம் இது?Ayudha ezhuthu serial, sub collector indira, kaliyamma, sakthi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express