“விஜய் 62 படத்தில் நான் நடிக்கவில்லை” - பியா பாஜ்பாய் மறுப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 62’ படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தி தவறு என மறுத்துள்ளார் பியா பாஜ்பாய்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 62’ படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தி தவறு என மறுத்துள்ளார் பியா பாஜ்பாய்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பியா பாஜ்பாய். தமிழில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

பியா பாஜ்பாய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 62’ படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்தச் செய்தியில் உண்மையில்லை என மறுத்துள்ளார் பியா பாஜ்பாய். படம் தொடர்பாக தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி ‘விஜய் 62’ படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்தத் தகவலும் பொய் என கூறப்பட்டது. இந்நிலையில், பியா பாஜ்பாய் நடிப்பதாக வெளியான தகவலும் பொய்யாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் ‘விஜய் 62’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும் நடைபெற்றுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close