Amitabh Bachchan’s first family car Vintage Ford made him speechless : ஒவ்வொரு வருடமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் 26/11 மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா கேட் அருகே நிகழ்ச்சி நடத்தும். இந்த நிகழ்வினை பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குவார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஒவ்வொரு வருடமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் இயக்குநர் ஆனந்த் கோயன்கா, அமிதாப் பச்சனுடன் ஆலோசனை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை அமிதாப்பை சந்திக்க சென்ற ஆனந்த் கோயன்கா, அமிதாப்பிற்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
சில நேரங்களில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் போவதுண்டு. தற்போது அதே நிலையில் தான் நானும் இருக்கின்றேன். நான் என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தவே நினைக்கின்றேன். இருந்தும் வார்த்தைகள் ஏதும் வரவில்லை என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிதாப் பச்சன்.
அதில் அவர் “என்னுடைய முந்தைய பதிவுகளில், என் முதல் குடும்ப கார் குறித்து எழுதியிருந்தேன். அதில் அந்த கார் ஃபோர்ட் பெர்ஃபெக்ட் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும் 26/11 மும்பை குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிகழ்ச்சியினை நடத்தும் ஆனந்த் கோயன்கா நேற்று என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். ஒவ்வொரு வருடமும் 26/11 நிகழ்வு குறித்து பேசி அதனை செயல்படுத்துவோம். ஆனால் நேற்று என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு அவர் ஆளாக்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
நான் என்னுடைய முதல் கார் குறித்து நான் எப்போதோ குறிப்பிட்டிருந்தேன். இந்த வருடம் நடைபெற்ற 26/11 நிகழ்வுக்கு பின்பு அந்த காரை மாதக்கணக்கில் ஆனந்த் தேடியுள்ளார். அதே ஃபோர்ட் பெர்ஃபெக்ட். அதே மாடல். அனைத்தும் ரிப்பேர் செய்யப்பட்டு ஓடும் நிலையில், புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு என்னுடைய வீட்டுக்கு அதனை அன்பளிப்பாக எடுத்து வந்துள்ளார். 2882 தான் என்னுடைய கார் நம்பர். அதையும் கூட என்னால் அதில் காண முடிந்தது.
என் வாழ்நாளில் இப்படி ஒரு விசயத்தை எனக்கு எவரும் செய்ததில்லை. நன்றியுணர்வாலும், உணர்ச்சியாலும் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றேன். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார். தன்னுடைய போஸ்ட்டின் முடிவில் கண்கள் நீரால் நிரம்பியுள்ளது என்று முடித்திருந்தார். மேலும் படிக்க : நடிகை வீட்டில் நகை திருட்டு… காவலாளி, கார் ஓட்டுநர் துணிகரம்!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Amitabh bachchans first family car vintage ford made him speechless
சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் திடீர் வாழ்த்து: ‘அறம் சார்ந்த பணியில் நிம்மதியுடன் வாழ வேண்டும்
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை