இந்திய சினிமாவின் ‘பிக் பி’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 75-வது பிறந்தநாள் அன்று, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அமிதாப்பச்சன் கடந்த 5 வருடங்களாக தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டு தன்னுடைய 70-வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடிய அமிதாப்பச்சன், அதன்பிறகான பிறந்தநாள் தினங்களை தன் குடும்பத்தினருடன் மட்டுமே கொண்டாடினார்.
இந்நிலையில், இவரது 75-வது பிறந்தநாள் விழா, வரும் அக்டோபர் 11-ஆம் தேதி (புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாளையும் அவர் தன் குடும்பத்தினருடன் செலவழிக்க திட்டமிட்டுள்ளார் அமிதாப்பச்சன். அதற்காக, செவ்வாய் கிழமை அவரது குடும்பத்தினர் அனைவரும் மும்பை காலிங் விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அமிதாப்பச்சன், மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி, ஆரத்யா, மகள் ஸ்வேதா நந்தா, பேத்தி நவ்யா நவேலி நந்தா ஆகியோரும் அவருடன் புறப்பட்டு சென்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆரத்யாவை அழைத்து செல்லும் புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் விரும்பியுள்ளனர்.
தன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அமிதாப்பச்சன், “என்னுடைய 75-வது பிறந்த நாளை எந்த வகையிலும் நான் கொண்டாடவில்லை. அதனால், அன்றையதினம் நான் ஊரில் இருக்க மாட்டேன்”, என பதிவிட்டார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Amitabh off to maldives for 75th birthday bash aishwarya aaradhya abhishek join
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!