/tamil-ie/media/media_files/uploads/2017/11/anirudh.jpg)
anirudh ravichander, master, physically challenged person, vaathi coming song
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்துக்கு, அனிருத் இசையமைக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்.
‘இந்தியன்’ படத்துக்கு வசனங்கள் எழுதியதோடு மட்டுமின்றி, திரைக்கதையிலும் ஷங்கருக்கு உதவியாக இருந்தார் எழுத்தாளர் சுஜாதா. சமூகக் கருத்துகளோடு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. ‘பிக் பாஸ்’ ஃபைனலில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ரஜினியின் ‘2.0’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது.
ஷங்கரின் படங்களுக்குப் பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான், எப்போதாவது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பார்கள். ஆனால், ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. கமல்ஹாசன் - ஷங்கர் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவாம் இது.
தீவிர அரசியலில் நுழைய ஆர்வம் காட்டும் கமல்ஹாசன், எல்லா இடங்களிலும் இளைஞர்களைப் பற்றி உயர்வாகப் பேசி வருகிறார். எனவேதான் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் கமல் என்கிறார்கள். கமலின் கடைசி 4 படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.