Advertisment

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு அனிருத் தான் மியூஸிக்காம்...

அஜித் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்துக்கு, இறுதியில் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
anirudh ravichander playing key board

anirudh ravichander playing key board

அஜித் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்துக்கு, இறுதியில் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக ‘விஸ்வாசம்’ தயாராக இருக்கிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களில், கடைசியாக வெளியான ‘விவேகம்’ தோல்வியைத் தழுவியது. எனவே, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பிலேயே அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜித்.

விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில், அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ‘விஸ்வாசம்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படத்துக்கு, அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால், ‘விஸ்வாசம்’ படத்துக்கு அவர் இசையமைக்க மாட்டார் என ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல் வேறு சில இசையமைப்பாளர்களிடம் தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் சிவாவும் பேசிவந்தனர்.

யுவன் சங்கர் ராஜா, ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால், சம்பளம் ஒத்து வராததால் அவர் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்து, ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்.ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எதுவுமே செட்டாகாத நிலையில், கடைசியாக அனிருத்தையே ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment