வெளியே ஆர்மி… உள்ளே அனிதா: இந்த ‘பார்பி டால்’ என்ன செய்யப் போறாங்க?

‘அட! நம்ம அனிதா சம்பத்தா இது! பார்பி டால் போல இருக்காங்களேப்பா!’ என்று அனைவரையும் சிலாகித்துப் பார்க்க வைத்தது அவருடைய அவுட்ஃபிட்.

Bigg Boss 4 tamil day 2 review score
Bigg Boss 4 tamil day 2 review score

Anitha Sampath Bigg Boss 4 Tamil: லாக்டவுனால் டவுனாகிப் போயிருந்த மக்கள், பிக் பாஸ் நான்காவது சீசனால் சுறுசுறுப்பாகி உள்ளனர். ஏற்கெனவே மீம்ஸ், ட்ரோல்ஸ், ஆர்மி வேலைப்பாடுகளில் படுபிஸியாகிவிட்டனர் நம்ம ஊரு இளைஞர்கள். ஒவ்வொருவரின் அறிமுக நிகழ்ச்சி முடிவதற்குள் அவர்களைப் பற்றிய மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் காணமுடிந்தது. அந்த அளவிற்கு ‘டெடிகேட்டடாக’ வேலைப் பார்க்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்தது செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் என்ட்ரி.

‘அட! நம்ம அனிதா சம்பத்தா இது! பார்பி டால் போல இருக்காங்களேப்பா!’ என்று அனைவரையும் சிலாகித்துப் பார்க்க வைத்தது அவருடைய அவுட்ஃபிட். தான் கடந்து வந்த உடல் கேலியைப் பற்றி வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் பேட்டர்னில் ஃபாத்திமா பாபுவைத் தொடர்ந்து செய்தி வாசிப்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனிதா சம்பத் இணைந்திருக்கிறார். இந்த சீசனில் பெரும்பாலும் விஜய் டிவி முகங்கள் என்றாலும், சன் டிவி எப்படி விஜய் டிவி பக்கம் வந்தது என்ற சந்தேகம் எழாமலில்லை. பலர் இதற்கும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர் மட்டுமல்ல, காலா, 2.0, காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், டேனி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனக்குப் புத்தகங்கள் வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும் என்று பிக் பாஸ் இன்ட்ரோ வீடியோவில் குறிப்பிட்ட அவருக்குச் சிறப்புப் புத்தகம் உண்டு என்று கமல் சொன்னதும், அனிதாவின் ரியாக்ஷன் ‘ஹயிலைட்’. கமலை பேச விடாமல் படபடவென பேசித் தள்ளிய அனிதாவிற்கு ஏற்கெனவே ஆர்மி இருக்கிறது.

Bigg Boss Anitha Sampath Tamil News
Bigg Boss Anitha Sampath Tamil News

ஆண்கள் செய்திக்காகவும், பெண்கள் ஆடை ஆபரணங்களுக்காகவும் செய்திகள் பார்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ‘இன்னும் செய்தி போடலையா?’ என்ற எதிர்பார்ப்பைத் தமிழ் இளைஞர்களின் மனதில் விதைத்து, அவர்களைச் செய்திகள் பக்கம் இழுத்தது மட்டுமல்லாமல் தனக்கான ஆர்மியையும் உருவாக்கியவர் அனிதா. அவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவ். அதுமட்டுமின்றி, இந்த நீண்ட லாக்டவுனில் யூடியூப் தளத்தில் தனக்கென தனிப்பட்ட சேனல் ஒன்றை உருவாக்கி, பல பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

Anitha Sampath with her Husband Prabha
Anitha Sampath with her Husband Prabha

கடந்த ஆண்டு பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து இளைஞர்களின் ஹார்ட்டை பிரேக் செய்தார். என்றாலும், இவருக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது என்று தற்போது ட்வீட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது வரை மிகவும் எதார்த்தமாகப் பேசி பழகிக்கொண்டிருக்கும் அனிதாவின் வேறுபட்ட குணத்தைக் காண்பதற்கு ‘வெயிட்டிங்’ என்றபடி கியூட் ரியாக்ஷன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிச மக்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anitha sampath entry in bigg boss season 4 tamil news

Next Story
’நான் எந்த கேம் பிளானோடவும் வரல’ ஷிவானியை சீண்டிய ஹவுஸ்மேட்ஸ்Bigg Boss 4 Tamil Kamal Hassan Aari Rio Ramesh Rekha eviction Shivani Review Day 14
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express