/indian-express-tamil/media/media_files/2025/05/16/q6zkZdNY9Su0M9ewI56X.jpg)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, டீன்ஏஜ் புகைப்படத்தை அவரது தோழி ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Anushka Sharma’s pre-Bollywood photo has fans doing a double take, see here
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, தனது நடிப்பிற்காகவும், சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகளுக்காகவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். அவ்வப்போது தனது பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தோழி கனிகா கர்விங்கோப் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் புகைப்படத்தில், அனுஷ்கா சர்மா தனது தோழியுடன் கோவாவில் இருப்பது போல் தெரிகிறது. 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், அனுஷ்கா ஒரு கறுப்பு நிற டேங்க் டாப்பும், நீல நிற டெனிம் ஜீன்ஸும் அணிந்திருக்கிறார். அவரது தோளில் சிவப்பு நிறத் தோல்பை ஒன்று தொங்குகிறது. குறிப்பாக, அக்காலத்து ஃபேஷனுக்கு ஏற்ப அவரது புருவங்கள் மிகவும் மெல்லியதாக இருக்கிறது.
இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த கனிகா கர்விங்கோப், அனுஷ்காவின் புருவங்களை கிண்டல் செய்யும் விதமாக, “ஹாஹாஹா அனுஷ்கா சர்மா, இதோ பார் என்ன கண்டுபிடிச்சேன்ன்னு. நம்ம புருவம்லாம் எப்படி இருந்துச்சு பாரு ஹாஹாஹா. கோவா, 2004?” என்று பதிவிட்டிருந்தார். அனுஷ்கா சர்மா இந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, “ஹாஹாஹா” என்று சிரிக்கும் எமோஜியுடன் பதில் அளித்துள்ளார்
அனுஷ்கா சர்மா 2007 ஆம் ஆண்டு மும்பை வந்து மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். புகழ்பெற்ற பேஷன் டிசைனர் வெண்டல் ரோட்ரிகஸுடன் பணியாற்றிய பிறகு, 2008 ஆம் ஆண்டு ஷாருக் கானுக்கு ஜோடியாக ‘ரப் நே பனா தி ஜோடி’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ பட ரிலீஸ்காக காத்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.