‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்காவா?

ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கிறார் என்கிறார்கள். தமிழில் வெயிட்டான படத்துடன் களமிறங்க நினைத்தவருக்கு, அஜித் படம் கிடைத்திருக்கிறது.

ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கிறார் என்கிறார்கள். தமிழில் வெயிட்டான படத்துடன் களமிறங்க நினைத்தவருக்கு, அஜித் படம் கிடைத்திருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்காவா?

அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

Advertisment

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் இணைகிறது. ‘விவேகம்’ படம் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்குத் தந்துள்ளார் அஜித். வழக்கம்போல் வெற்றி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கிராமத்துக் கதையாக ‘விஸ்வாசம்’ படத்தை சிவா இயக்கப் போகிறார் என்கிறார்கள். ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல், ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கிறார் என்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக வெயிட் போட்ட அனுஷ்கா, சில வருடங்கள் கஷ்டப்பட்டு இப்போதுதான் எடையைக் குறைத்திருக்கிறார். எனவே, தமிழில் வெயிட்டான படத்துடன் களமிறங்க நினைத்தவருக்கு, அஜித் படம் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர்.

Advertisment
Advertisements

அத்துடன், சரத் குமார் ‘விஸ்வாசம்’ படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: