scorecardresearch

ரஜினிகாந்துடன் மோதுகிறாரா அனுஷ்கா?

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ‘பாகமதி’ படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

ரஜினிகாந்துடன் மோதுகிறாரா அனுஷ்கா?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்துடன், அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படம் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘பத்மன்’ படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றார்கள். ஆனால், ‘திட்டமிட்டபடி ‘2.0’ ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாகும்’ என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ‘பாகமதி’ படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஜி.அசோக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

திட்டமிட்டபடி ஜனவரி 25ஆம் தேதி ‘2.0’ ரிலீஸானால், ரஜினிகாந்த் படத்துடன் அனுஷ்காவின் ‘பாகமதி’ மோதும் சூழ்நிலை ஏற்படும்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Anushka shettys bhaagamathie clash with rajinikanths 2 point

Best of Express