ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், மற்றொரு இசை ஜாம்பவான் எல் சுப்பிரமணியத்துடன் யூடியூப் சேனலில் நடந்த உரையாடலில் இசை தன்னை வித்தியாசமான விஷயங்களைச் செய்ய வைத்தது என்று கூறியுள்ளார்.நிறைய இசையமைப்பாளர்கள் மற்றும் முழு ஆர்கெஸ்ட்ராவைக் கொண்டு இசையமைக்கும் பழைய முறையை எப்படி மாற்றினார் என்று சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்தான் காரணம். அப்போது அவர்களிடம் ஒரு படத்திற்கு எட்டு டிராக்குகள் மட்டுமே இருந்தன, நான் ஜிங்கிள்ஸ் பின்னணியில் இருந்து வந்ததால் என்னிடம் 16 டிராக்குகள் இருந்தன, மேலும் என்னால் நிறைய செய்ய முடிந்தது. யாரும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. எல்லோரும் ஆழத்தை விரும்பினர் அதேசமயம் ஆர்கெஸ்ட்ரா விலை உயர்ந்தது. ஆனால் அனைத்து பெரிய கருவிகளும் சிறியதாக மாறியது.
நான் தொழில்நுட்ப மாற்றத்தின் இடைக்கால காலத்தில் வந்தேன் என்பதால் பரிசோதனை செய்து தோல்வியடைய எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனது தோல்வி யாருக்கும் தெரியாது, எனது வெற்றியை மட்டுமே அவர்கள் பார்த்தார்கள், ஏனென்றால் என் தோல்விகள் அனைத்தும் ஸ்டுடியோவிற்குள் நடந்தது. நாங்கள் மீண்டும் வந்து செய்துகொண்டே இருந்தோம். ஹோம் ஸ்டுடியோ வைத்திருப்பதால் கிடைத்த சுதந்திரம் என கூறியுள்ளார்.
மேலும் இந்த ஹோம் ஸ்டுடியோ எனக்கு நிறைய பரிசோதனை செய்வதற்கான சுதந்திரத்தை அளித்தது. நிச்சயமாக, நாம் அனைவரும் பணம் பெற வேண்டும் நோக்கத்தில் தான் இருப்போம். ஆனால் ஆனால் அதையும் தாண்டி எனக்கு ஆர்வம் இருந்தது. அதாவது மேற்கு உலகம் அதைச் செய்கிறது, ஏன் நம்மால் முடியாது? நாம் அவர்களின் இசையைக் கேட்கும்போது, ஏன் அவர்களால் நம் இசையைக் கேட்க முடியாது? நான் அதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன், ‘ஏன்’ சிறந்த தயாரிப்பு, சிறந்த தரம், சிறந்த விநியோகம் மற்றும் மாஸ்டரிங் ஆனது… அது இன்னும் என்னை இயக்குகிறது.
சில நேரங்களில், நமது திரைப்படங்கள் ஆஸ்கார் விருது வரை செல்வதை நான் பார்க்கிறேன்… அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன. நாம் மற்றொரு நபரின் காலணியில் இருக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நான் மேற்கத்தியர்களின் காலணியில் இருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் என் காலணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..
இந்த நேர்காணல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பே இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி படமாக்கப்பட்டது. உரையாடலின் முடிவில் எல்.சுப்பிரமணியம்ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது விழாவில், இந்தியா சிறந்த அசல் பாடல் (நாட்டு நாட்டு) மற்றும் சிறந்த ஆவணப்பட குறும்படம் (தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/