கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
Oscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான்
இந்த ஆண்டின் ஆஸ்கர் விழா கடந்த திங்கள் கிழமை (அமெரிக்காவின் நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, 2009-தில் ரகுமான் வாங்கிய இரண்டு ஆஸ்கர் விருது நினைவிற்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.