/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-16-2.jpg)
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அறந்தாங்கி நிஷா, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
View this post on InstagramThrowback !!! Follow @aranthanginisha.offl
A post shared by @ tamilmemeexpress on
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிஷா தனது கணவர், குழந்தைகள், மாமியார் குறித்து பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அறந்தாங்கி நிஷா தனது சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஷாவின் காமெடிகளில் பெரும்பாலும், அவரது மாமியார் மற்றும் கணவனை ஒட்டுவதாக அமையும். இருப்பினும், தனது வெற்றிக்குப் பின் கணவர் மற்றும் மாமியாரின் பங்கு அளப்பரியாதது என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்கள் பலரும் பங்கேற்றபோது ஒரு பெண் கலைஞராக பங்கேற்று பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. விஜயின் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.