அரியலூர் மாவட்டம் பூவிருந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கீலா. கடந்த 2015ம் ஆண்டு நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதையடுத்து நடந்த மருத்துவக் கலந்தாய்வின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு முதலாம் ஆண்டு கல்விக்கட்டணம் மட்டுமே செலுத்த முடிந்தது. இந்த நிலையில், அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ரங்கீலாவின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி 2-ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற ரங்கீலா, கல்விக்கட்டணம் செலுத்தாததால் கல்லூரியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இது தொடர்பாக ரங்கீலா கூறுகையில், "2ம் ஆண்டு உங்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதாக அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தினர் தெரிவித்தார்கள். அதன் பிறகு விஜய் பிறந்தநாளுக்கு என்னை கூட்டிச்சென்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். குடும்ப புகைப்படமும் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் கட்டுவதாக சொன்ன கல்விக்கட்டணம் கட்டவில்லை.
இதனால், கல்லூரியை விட்டு என்னை வெளியேற்றிவிட்டார்கள். இதனால், நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். இங்கு 3 வாரமாக வீட்டு வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறேன்" என்றார். மேலும், எனக்கு உதவி செய்தால் நான் படிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ரங்கீலா படிப்பில் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், ஏழ்மை ஒன்றே அதற்கு தடையாக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரியலூர் விஜய் மன்ற ரசிகர்கள் வெளியிட்ட அறிவிப்பில், "ரங்கீலாவுக்கு பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிய ஜோஸ்பிரபு என்பவர் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் அளித்த வாக்குறுதி குறித்து உள்ளூர் நிர்வாகிகள் உட்பட யாருக்கும் தெரியாது.
ரங்கீலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது கல்வி தொடர நிதியுதவி செய்ய தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z303-300x217.jpg)
அதன்படி, ரங்கீலாவின் கல்விக் கட்டணம் விஜய் ரசிகர் மன்றத்தினரால் இன்று செலுத்தப்பட்டுள்ளது.