Advertisment

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் படைக்கப்போகும் சாதனைகள்!

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, இருபது கோடிகளுக்குமேல் படத்தின் ஓபனிங் வசூல் இருக்கும் என கணித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Avengers-Infinity-War-Team-Cap-Banner

பாபு

Advertisment

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் யுஎஸ், இந்தியா உள்பட பல நாடுகளில் நேற்று வெளியானது. முதல் மூன்று நாள் ஓபனிங்கில் இந்தப் படம் இந்தியாவில் பதினைந்து கோடிகளை வசூலிக்கும் என்று கணக்கிட்டிருந்தனர். நேற்று படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, இருபது கோடிகளுக்குமேல் படத்தின் ஓபனிங் வசூல் இருக்கும் என கணித்துள்ளனர்.

யுஎஸ்ஸில் வியாழக்கிழமை நடந்த ப்ரீமியர் காட்சிகளில் 39 மில்லியன் யுஎஸ் டாலர்களை அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் வசூலித்துள்ளது. இது யுஎஸ் சரித்திரத்தில் நான்காவது அதிகபட்ச பிரீமியர் ஷோ வசூலாகும்.

நேற்று யுஎஸ்ஸில் இப்படம் 4474 திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 225 முதல் 245 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று கணித்துள்ளனர். இதற்குமுன் ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 248 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் சீரிஸில் மூன்றாவது படம். முதல் அவெஞ்சர்ஸ் 2012 இல் வெளியானது. இப்படம் யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 207.4 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் சீக்வெல் அவெஞ்சர்ஸ் - தி ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஓபனிங் வசூலாக 191 மில்லியன் டாலர்களை கைப்பற்றியது. மூன்றாவது பாகமான இன்ஃபினிட்டி வார் இவ்விரு படங்களை கடந்து சாதனைப் படைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ப படத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

அவெஞ்சர்ஸ் சீரிஸில் மற்ற இரு படங்களைவிட அதிக ப்ரீமியர் காட்சி வசூலை இன்ஃபினிட்டி வார் பெற்றுள்ளது. அதேபோல் ஓபனிங் வசூலிலும் மற்ற இரு பாகங்களை தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுஎஸ் ஓபனிங் வசூலில் ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் 248 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனை இன்ஃபினிட்டி வார் முறியடிக்குமா என்பது எதிர்பார்ப்புக்குரிய கேள்வி. அதேபோல் ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படமே யுஎஸ்ஸில் 936.6 மில்லியன் டாலர்களுடன் வசூலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் அவதார். மூன்றாவது இடத்தில் இந்த வருடம் வெளியான பிளாக் பேந்தர் திரைப்படம் உள்ளது. இன்ஃபினிட்டி வார் குறைந்தபட்சம் பிளாக் பேந்தரின், 'யுஎஸ்ஸில் அதிகம் வசூலித்த மூன்றாவது படம்' (683 மில்லியன் டாலர்கள்) என்ற பெருமையை தட்டிப்பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே உள்ளவற்றில் எதை இன்ஃபினிட்டி வார் சாதிக்கிறது என்பதை அறிய திங்கள்வரை பொறுத்திருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment