Advertisment

Vijay Tv Serial: ராதிகா- கோபி உறவை போட்டு உடைத்த பாக்யா; என்ன நடக்கும் இனி?

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா உறவை பற்றி மொத்த குடும்பத்தார் முன்பு போட்டு உடைக்கிறார் பாக்கியா. இந்த வார புரமோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
baakiyalakshmi, Gopi, Radhika, baakiya, baakiyalakshmi serial today episode sharechat, bhagyalakshmi serial full episode disney+ hotstar tamil serial, vijay tv serial today episode youtube, Vijay Tv Serial, பாக்கியலட்சுமி சீரியல், விஜய் டிவி, ராதிகா- கோபி உறவை போட்டு உடைத்த பாக்யா; என்ன நடக்கும் இனி, disney+ hotstar vijay tv, star vijay live tv tamil, bhagyalakshmi serial jennifer real name, pandian stores vijay tv serial today episode hotstar

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் உச்ச கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் பாக்கியலட்சுமி என்கிற பாக்கியா. 40களின் இறுதியில் இருக்கும் பாக்கியாவுக்கு வளர்ந்த 2 மகன்கள், அதில் ஒரு மகனுக்கு திருமணமாகி மருமகள் இருக்கிறாள். ஒரு மகள் பள்ளிக்கூடம் படிக்கிறாள். கணவன் கோபி படித்தவன் தனியாக ஒரு நிறுவனம் நடத்துகிறான். பாக்கியா ஓரளவுக்கு மட்டுமே படித்தவள். குடும்பமே உலகம் என நினைப்பவள். ஒரு சிறிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்துகிறாள். கோபிக்கு படிக்காத வெகுளியான பாக்கியாவைப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில், கல்லூரி காலத்தில் படித்த ராதிகாவை காதலிக்கிறான். அவளுக்கு மயூ என்று பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். ராதிகாவும் பாக்கியாவும் நண்பர்களாக இருந்தாலும் இருவருக்கும் தெரியாமல் ராதிகாவுடனான உறவை தொடர்ந்து வந்த நிலையில் ஒருநாள் பூகம்பம் வெடிக்கிறது. ராதிகாவுக்கு கோபியின் குடும்பம் பற்றி தெரியவருகிறது. ராதிகா கோபியை விட்டு விலகி மும்பைக்கு சென்று செட்டில் ஆக திட்டமிடுகிறாள். அதே நேரத்தில், கோபியைப் பற்றி பாக்கியாவுக்கும் கோபியின் மகன், தாய், தந்தை, எல்லோருக்கும் தெரியவருகிறது.

Advertisment

அதுமட்டுமல்ல, கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தபோது மனைவி என்று கூறி ராதிகா பார்க்க சென்றதோடு, ராதிகாவும் கோபியும் பேசிகொண்டிருந்ததைப் பார்த்து பாக்கியா இடிவிழுந்தவள் போல உடைந்து போகிறாள்.

இந்த நிலையில்தான், பாக்கியா கோபியை உண்மையான முகத்தை குடும்பத்தினரின் முன் அம்பலப்படுத்துகிறாள். இப்படி பரபரப்பாக உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம்.

உண்மையில், பாக்கியலட்சு சீரியல் புரமோவில் கூறுவது போல் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தார்கள். ராதிகா - கோபி உறவு பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது.

இத்தனை நாட்களாக தனது கணவனை கண்மூடித் தனமாக நம்பி வந்த பாக்கியா, மருத்துவமனையில், கோபி - ராதிகா பேசி கொண்டிருப்பதை பார்த்துவிட்டாள். கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல், உடைந்துபோய் அழுதபடியே கொட்டும் மழையில் வீட்டுக்கு வருகிறாள்.

பாக்கியாவின் பேச்சில், நடத்தையில் மாற்றம் இருப்பதை பார்த்த கோபியின் அப்பா, பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து இருக்குமோ? என பயப்படுகிறார். தனது மருமகளுக்காக மகனுடன் சண்டை போட்ட அவருக்கு பயமும் கவலையும் அதிகம் ஆகிறது.

இந்த சூழலில்தான், பாக்கியலட்சுமி சீரியலில், இன்றைய எபிசோடில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் கோபியிடம் பாக்கியா சண்டை போடுகிறார். கோபியின் அம்மா தனது மகனுக்கு அடிப்பட்டு இருக்கிறது, பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறும்போது, பாக்கியா தனது மனதில் உள்ள கேள்விகளை எல்லாம் குடும்பத்தினரின் முன் கோபியை நோக்கி கேட்கிறாள். இதுவரை கோபியை எதிர்த்து கூட பேசாத பாக்கியா நேருக்கு நேர் நின்று ஆவேசமாகக் கத்தி, பேசி சண்டை போடுகிறாள். கோபி வசமாக மாட்டிக்கொண்டோம் என்று என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் நிற்கிறான்.

மருத்துவமனையில், கோபியைப் பார்த்தபோது, அவனுக்கு மருத்துவமனையில் ஃபீஸ் கட்டியது, கையை பிடித்து கொண்டு நீங்கள் கொஞ்சியது யார்? என பாக்கியா கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். எதிர்கொள்ள முடியாத கோபிக்கு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான். பாக்கியாவின் கேள்வியால் குழம்பி போகும் கோபியின் அம்மா ஈஸ்வரி தனது மகன் அப்படி செய்ய மாட்டான், என்ன விஷயம்? என விசாரிக்கும்போது, எழிலும் ஆமாம் எனக்கும் தெரியும் என்று கூறி அம்மாவுக்கு ஆதரவாகப் பேசுகிறான். பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி மருமகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

அப்போது தான் பாக்கியா மொத்த உண்மையையும் போட்டு உடைக்கிறார். ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லி மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி அளிக்கிறாள். கோபி - ராதிகா உறவு பற்றி பாக்கியாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இதனால் இனியா, செழியன், ஜெனி எல்லோரு அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்கியாவின் கேள்விகள் துப்பாகித் தோட்டாவைப் போல பாய கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் போல முழிக்கிறான்.

இதனால், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? கோபி - பாக்கியா பிரிந்து விடுவார்களா? பாக்கியா ,கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவாரா? ராதிகா கோபியை விட்டுவிட்டு மும்ம்பைக்கு சென்று செட்டில் ஆவாரா? அல்லது ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா? என்பது வரும் வார எபிசோடுகளில் தெரிய வரும். இப்படி பாக்கியலட்சுமி சீரியல் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2 Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment