கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், கோபியை திருமணம் செய்வது தொடர்பான ராதிகா என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment
திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.
கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.
இதில் கடந்த வார தொடக்கத்தில் கோபி விபத்தில் சிக்கி ஹாஷ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டபோது மனைவி என்று சொல்லி ராதிகா செய்த அனைத்தையும் தெரிந்துகொண்ட பாக்யா வீட்டிற்கு வந்த கோபியிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்டு திணறடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழக்கையை சந்தோஷமாக வாழுங்கள். அதையெல்லாம் பார்க்க ஒரு முட்டாளா நான் இங்கு இருக்க மாட்டேன் என்று பாக்யா வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், கோபி எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார்
இதனிடையே ராதிகா வெளியூறுக்கு போவதாக முடிவு எடுத்ததை தொடர்ந்து மயூவின் ஸ்கூல் சர்பிடிபிகேட் வாங்குவதற்காக தயாராகிறாள். அப்போது அவளது அம்மாவும் அண்ணனும் கோபியை பற்றி பேச ராதிகா டென்சன் ஆகிறாள். ஆனால் ராதிகாவின் அம்மா கோபியை உனக்கு பிடிச்சிருக்கா இல்லை என்று கேட்கிறார்.
அதற்கு புடிச்சிருந்துது என்று ராதிகா பதில் சொல்ல பாக்யா விஷயத்தை தவிர கோபி மேல வேற என்ன குற்றம் சொல்ல முடியும் உன்னையும் மயூவையும நல்லாத்தானே பார்த்துக்கறாரு அப்புறம் அவர கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன தயக்கம் என்று கேட்க ராதிகா யோசித்தபடி நிற்கிறாள்.
முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா நேராக தான்வேலை செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறாள். அங்கு எழில் செல்வி இருவரும் அவருடன் இருக்கின்றனர். இதனால் பாக்யா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கோபி விஷயத்தில் ராதிகா அவரது அம்மாவின் பேச்சை கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்யாவின் நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“