Advertisment

தமன்னா, சிம்ரன் வரிசையில்… காவாலா பாடலுக்கு பாக்கியலட்சுமி டான்ஸ்: வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலில் தமன்னாவின் நடனம் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வரும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi Serial Suchitra, Baakiyalakshmi Serial Suchitra kaavaalaa dance viral video, Baakiyalakshmi Serial, தமன்னா, சிம்ரன் வரிசையில்... காவாலா பாடலுக்கு பாக்கியலட்சுமி டான்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா டான்ஸ் வைரல் வீடியோ, Baakiyalakshmi Serial, Suchitra dance to Kaavaalaa song in line, Thamannah simran viral video

காவாலா பாடலுக்கு பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா டான்ஸ் வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலில் தமன்னாவின் நடனம் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வரும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ரீல்ஸ் செய்பவர்களின் ஃபேவரைட் பாடலாக காவாலா பாடல்தான் இடம்பெற்றுள்ளது.

காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம் மூலம் சிம்ரன், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் என்று சித்தரித்து வெளியான வீடியோக்கள் வைரலானது.

காவாலா பாடலுக்கு பிரபலங்கள் பலரும் டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வெளியிட்டு வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசித்ரா காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து டாப் சீரியல் வரிசையில் இருந்து வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி தன்னுடைய முன்னாள் காதலி ராதிகாவுடன் சென்று விட, பாக்யா சொந்தக் காலில் நின்று குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு சுயமரியாதையுடன் தடைகளைத் தாண்டி வாழ்கிறாள். தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்ற கணவன் கோபியை சோதனைகளைத் தாண்டி பாக்யா வெற்றிகொள்ளும்போது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பாக்யாவாக நடித்து வருபவர்தான் நடிகை சுசித்ரா. இந்த சீரியலில் இவரது அமைதியான பேச்சு, தோற்றம், நடிப்பு எல்லாமே அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சுசித்ரா பாக்யாவாக நடிக்கிறார் என்பதைவிட பாக்யாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும். பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவுக்கு சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னாவின் டான்ஸ் உடன் வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா காவாலா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கிறார். அவருடன் அந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா ராஜேஷ் இருக்கிறார்.

சுசித்ராவின் காவாலா ரீல்ஸைப் பார்த்த அவரது ரசிகர்கள் இது நம்ம பாக்யாவா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த சுசித்ரா கன்னட சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்த நிலையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment