அமரேந்திர பாகுபலி, மஹேந்திர பாகுபலி, 'ராஜ மாதா' சிவகாமி தேவி, தேவசேனா, பல்வாள்தேவன், கட்டப்பா, பிங்கலத்தேவன் ஆகிய இந்த பிரதான கேரக்டர்களை வைத்து ரூ.250 கோடிக்கு 'பாகுபலி 2' திரைப்படம், தற்போது உலகளவில் 1500 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ் இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் மட்டும் இப்படம் 460 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல், தமிழில் 100 கோடி வசூல் குவித்துள்ளது.
இந்திய திரைப்படம் ஒன்று 1,500 கோடி வசூல் செய்திருப்பது இதுவே முதன்முறையாகும்.