பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2: கதையே மாறுது போல!

பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமத்தால் சீரியல்களின் கதையே மாறுவது போல தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியல்கள் மெகா சங்கமம் என்று இரண்டு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகிறது.

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் இன்று முதல் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரே எபிசோடாக ஒளிபரப்பாகிறது. இந்த மெகா சங்கமத்தை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம். ஊரடங்கு போட்டப்பட்டுள்ளதால், 2 சீரியல்களின் நடிகர்கள் அனைவரும் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது என்பது சீரியலை பார்க்கும்போதே தெரிகிறது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மற்ற தொலைக்காட்சிகள் சீரியல்களை நிறுத்துவதாக அறிவித்துவிட்ட நிலையில், விஜய் டிவி இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு சீர்யலை நிறுத்தாமல் ஒளிபரப்பி வருகிறது.

கோயிலுக்கு சென்ற சௌந்தர்யா மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் இருப்பதால், தற்போது வீட்டில் அகில் அவரது மனைவி அஞ்சலி, அகிலின் அப்பா ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால், சில நாட்களுக்கு எங்காவது ரிசார்ட்டுக்கு சென்று தங்கிவிட்டு வாருங்கள் என சௌந்தர்யா கூறுகிறார். சௌந்தர்யாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட 3 பேரும் ரிசார்ட்டுக்கு கிளம்ப முடிவெடுக்கிறார்கள்.

சௌந்தர்யா இந்த யோசனையை கொடுப்பதற்கு காரணம், அகிலின் மனைவி அஞ்சலி கர்ப்பமாக இருப்பதால் அவளால் வீட்டில் தனியாக சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய முடியாது என்பதால் இப்படி ஒரு யோசனையைக் கூறுகிறாள். சௌந்தர்யாவின் யோசனையை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர், அகில், அஞ்சலி, அகிலின் அப்பா வேணு ரிசார்ட்டுக்கு கிளம்புகிறார்கள்.

அகில், அஞ்சலி, வேணு 3 பேரும் ரிசார்ட்டுக்குப் போய் இறங்குகிறார்கள். மூன்று பேரும் ஏதாவது சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள். அகில் ஹோட்டலுக்கு சென்று விசரித்துவிட்டு வருகிறான். அஞ்சலி தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என்று கூறுகிறாள். ரூம் சர்வீஸ் சொல்லி மூன்று பேரும் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று வேணு கூறுகிறார். சரி என்று 3 பேரும் செல்கிறார்கள்.

அடுத்த காட்சியில், சரவணன் தனது தந்தையுடன் தங்கள் ஜவுளிக்கடைக்கு துணி வாங்கி வர காஞ்சிபுரத்துக்கு புறப்படுகிறார். வழியில் எங்காவது ஹோட்டலில் நல்ல சாப்பாடு சாப்பிடலாம். மட்டன் கறி பூ போல இருக்கும் என்று இப்போதே சரவணன் அப்பா இப்போதே சாப்பட்டைப் பற்றி விவரிக்கிறார். அப்போது செந்தில், அர்ச்சனா, பார்வதி 3 பேரும் தாங்களும் வருவதாகக் கூறுகிறார்கள். அர்ச்சனா வேண்டாம் என்று ஏற்கெனவே அப்பா கூறிவிட்டதால் இவர்கள் எங்கே என்று கேட்க, பார்வதி கொடுத்த ஐடியாப்படி காஞ்சிபுரத்தில் அர்ச்சனாவின் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி கோயில் இருப்பதாகவும் அதைப் பார்க்க வேண்டும் என்று கூறி சமாளிக்கிறார்கள்.

அப்போது, சரவணன், இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்திருந்தால் சந்தியாவையும் அழைத்து வந்திருக்கலாம் என்று யோசிக்கிறான். ஆனால், இதற்கு மேல் வாய்ப்பு இல்லை என்று நினைத்துக்கொள்கிறான். பிறகு, ஒருவழியாக அனைவரும் புறப்பட்டு செல்கிறார்கள்.

கார் ஒரு இடத்தில் நிற்கிறது. காஞ்சிபுரம் வந்துவிட்டதா என்று அர்ச்சனா கேட்கிறாள். அதற்கு இன்னும் 75 கி.மீ இருக்கிறது என்று சலித்துக்கொள்கிறாள். அனைவரும் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு செல்கிறார்கள். அது அகில், அஞ்சலி, வேணு சென்றிருக்கும் ரெஸ்டாரண்ட்.

இந்த ரெஸ்டாரண்ட்டில் உணவு விலை அதிகமாக இருக்கும் என்று சரவணன், அவனுடைய சகோதரன் செந்தில் என குடும்பத்தினர் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அப்போது, போர்டைப் பார்க்கும் பார்வதி இங்கே செல்ஃப் சர்வீஸ்தான். நாமலேதான் சாப்பாடு எடுத்து பரிமாறிக்கொள்ள வேண்டும். புஃபே சிஸ்டம் என்று விளக்குகிறார். செந்தில் சாப்பாடு வாங்கிவர செல்கிறான். அங்கே எதிரே வரும் அகிலும் செந்திலும் தெரியாமல் மோதிக்கொள்கிறார்கள். கையில் இருந்த சாப்பாடு கொட்டிவிட்டதால் கோபப்படும் செந்தில் கொட்டிவிடுவதால் கோபடமைந்து, “உனக்கு கண்ணு தெரியல. சாப்பாடு கொட்டிவிட்டது.” என்று கூறியதோடு மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசுகிறான்.

அகில் தெரியாமல் மோதிவிட்டேன் என்று முதலில் சாரி கேட்கிறான். ஆனால், செந்தில் கடுமையாக திட்டியதால் கோபடமைந்த அகில், சாப்பாடு வேண்டும் என்றால் வாங்கித் தருகிறேன். ரொம்ப ஓவரா பேசுற என்று இவனும் திட்டுகிறான். வாய் வார்த்தை முற்றி இருவரும் சட்டையைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு இரு குடும்பத்தினரும் வந்து அவர்களை தடுக்கிறார்கள். பிறகு, என்ன் ஆனது என்று விசாரிக்கிறார்கள். ஒரு வழியாக சண்டை ஓயும்போது, சரவணனின் தந்தை, அகிலின் தந்தை வேணுவை எங்கேயோ பார்த்ததாகக் கூறி, நினைவுபடுத்துகிறார். பிறகு, அவர்கள் அனைவரும் குத்தாலத்துக்கு வருவதாகச் சொன்னதையும் ஏற்கெனவே நடந்த மெகா சங்கம் நிகழ்ச்சியில் நடந்ததை நினைவுகூர்ந்து சண்டையை விட்டு நெருக்கமாகிறார்கள். சண்டை போட்டதால் செந்தில் – அகில் உர்ரென இருக்கும் பேசாமல் இருக்கிறார்கள். அவர்களை சமாதானம் அடைந்து பேசும்படி கூறுகிறார்கள்.

அந்த நேரத்தில்தான், திடீரென லாக் டவுன் போட்டுவிட்டது என்று தெரியவருகிறது. அதனால், சரவணன் குடும்பத்தினர் எப்படி ஊருக்கு போவது என்று யோசிக்கிறார்கள். காஞ்சிபுரத்துக்கு போய்விட்டால், பிறகு அங்கே எங்கேயாவது தங்கிக்கொள்ளலாம் என்று சரவணனின் தந்தை கூறுகிறார். ஆனால், வேணு, இப்போது நீங்கள் இ பாஸ் இல்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. நீங்கள் காஞ்சிபுரத்துக்கு போனாலும் அங்கே எந்த இடத்திலும் தங்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இங்கேயே தங்கிவிட்டு தளவு அளிக்கப்பட்டால் போகலாம் என்று கூறுகிறார்.

சரவணனும் எனக்கும் இதுதான் சரியாகப்படுகிறது என்று கூறுகிறார். அப்போது அஞ்சலி, நீங்களும் எங்களுடன் தங்கலாமே என்று கூறுகிறாள். பிறகு எல்லாமே சாப்பிடுகிறார்கள்.

வேணு ரெஸ்டாரண்ட்டில் நீச்சல் குளத்து அருகே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். லேசாக இருமுகிறார். அப்போது அங்கே வரும் அஞ்சலி, இதை அலட்சியமாக விடவேண்டாம். இருங்க கஷாயம் போட்டுக்கொண்டு வருவதாகக் கூறிவிட்டு சென்று கஷயாம் போட்டு எடுத்து வந்து மாமனார் வேணுவுக்கு தருகிறாள்.

வேணு கஷாயம் போட்டு தந்த மருமகளைப் பாராட்டுகிறார். இதைக் கேட்ட அஞ்சலி, “இதற்கு முன்பு, வீட்டில் யாராவது ஏதாவது வேலை சொன்னால் கோபமாக வரும். அத்தையும் எப்போதும் எதற்கெடுத்தாலும் கண்ணம்மா கண்ணம்மா என்று கூப்பிடுவாங்க. அதனால், வீடு முழுக கண்ணம்மாவே நிறைஞ்சிருக்கிற மாதிரி இருக்கும். அப்போது யாராவது எங்கிட்ட ஏதாவது வேலை சொன்னா எனக்கு கோபமாக வரும். சண்டை போடுவேன். ஆனால், இப்போ, வீட்டில் இருக்கிறவங்க ஏதாவது கேட்டு அவர்களுக்கு செய்யும்போது செய்து தரும்போது மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறுகிறாள்.
அஞ்சலியின் மாற்றத்தைப் பார்த்து சந்தோஷப்படும் வேணு, ஏம்மா நீ இந்த அமைதிப்படை படம் பார்த்திருக்க இல்ல. அதில, மணிவண்ணன், சத்யராஜ்கிட்ட, அமாவாசை, இந்த கிழிந்துபோன அண்டர்வேரில் உலக அரசியலையே சொல்லிட்டியே என்கிற மாதிரி, நீ இந்த ஒரு கஷாயத்துல குடும்பம் மொத்தத்தையும் சொல்லிட்டியாமா” என்று கூறி சந்தோஷத்துடன் சிரிக்கிறார். இதை தூரத்தில் இருந்து பார்க்கும் அகில் மனதுக்குள் சந்தோஷப்படுகிறான்.

அப்போ எல்லாம், நான் என்னையும் அறியாமல் தப்பா நடந்திருக்கேன்னு தோனுச்சு. இப்போ, மனசறிஞ்சு மாறிட்டேன் என்று அஞ்சலி கூறுகிறாள்.

இதைக்கேட்ட வேணு, நானும் உங்க அத்தையும் அப்போது எல்லாம் உன்னைப் பார்த்து ரொமப் கஷ்டப்பட்டிருக்கிறோம். நீ எப்போது மாறுவ என்று பேசியிருகிறோம். அகிலன் கூட நீ மாற மாட்டன்னு வருத்தப்பட்டிருக்கான். ஆனால், இப்போது நீ மாறிட்டதை நினைச்சா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில், சரவணன் தனது மனைவி சந்தியாவை தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று நினைத்து வருத்தப்படுகிறான். அதே பொல, சந்தியாவும் வீட்டில் சரவணன் ஊருக்கு போய்விட்டதை நினைத்து வருத்தப்படுகிறாள்.

சரவணன் சந்தியாவுக்கு போன் செய்யலாம் என்று போன் செய்கிறான். அப்போது, சந்தியாவும் போன் செய்கிறாள். இருவரும் ஒரே நேரத்தில் போன் செய்வதால் பிஸி பிஸி என்று வருவதால் இருவருமே வருத்தப்படுகிறார்கள். ஒருவழியாக சந்தியாவுக்கு சரவணனிடம் இருந்து போன் வருகிறது. சந்தியா நான் உங்களோட பேசுவதற்கு ரொம்ப நேரம் முயற்சி செய்ததாகக் கூறுகிறாள். சரவணனும் அதனால்தான் பிஸிபிஸினு வந்திருக்கும் என்று கூறுகிறான். அதோடு, லாக்டவுனில் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டதை சொல்கிறான். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே அடைந்து கிடைக்க வேண்டியது இருக்கும். ஒருவாரத்தில முடியுமா என்று தெரியும் என்கிறான்.

அப்போது, ஒருவாரத்துக்கு தனியா என்ன செய்யப்போகிறீர்களோ என்று சந்தியா கேட்கிறாள். அதற்கு சரவணன், நாங்க இங்க தனியா இல்லைங்க தெரிஞ்ச குடும்பத்தோட தங்கியிருக்கிறோம். அவங்கதான் ரூம் ஏற்பாடு பண்ணி கொடுத்தாங்க என்று சொல்கிறான். சந்தியா யாரு என்று கேட்க, சூப்பர் குடும்பம் போட்டிக்கு போனபோது கண்ணம்மா குடும்பத்தினர் வந்திருப்பதைக் கூறுகிறான். அப்போது சந்தியா, கண்ணம்மா வந்திருக்கிறாரா என்று கேட்க இல்லை. ஆனால், கண்ணம்மாவும் இல்லை. அவங்க புருஷனும் இல்லை. அகில், அவங்க மனைவி அஞ்சலி, வேணு 3 பேரும் இருக்காங்க என்று கூறுகிறான்.

அதற்கு சந்தியா உங்களுக்கு பேச துணையாக யாராவது இருக்காங்களே என்று கூறுகிறான். இதைக் கேட்ட சரவணன், நீங்கதான் தனியா இருக்கிறீங்க… என்று வருத்தப்படுகிறான்.

ஆனால், சந்தியா தான் தனியாக இல்லை. அத்தை, ஆதி எல்லாம் இருக்கிறார்கள் என்று கூறுகிறாள். ஆனால், நான் வருகிற வரைக்கும் எப்படி எங்க அம்மாவ எப்படி சமாளிப்பீங்க என்று கேட்கிறான். அதற்கு சந்தியா இப்போதுவரைக்கு ஒன்னும் பிரச்னை இல்லை. நான் பார்த்துக்கிறேன் என்று கூறிவிட்டு பிறகு போன் செய்வதாகச் சொல்லி போனை வைக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

நாளைய எபிசோடில், பாரதி குடும்பத்தை வெண்பா இங்கேயும் தேடி வருகிறாள். என்ன செய்யப்போகிறாளோ? பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமத்தால் சீரியல்களின் கதையே மாறுவது போல தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma raja rani 2 serial mega sangamam today episode akil senthil fighting309538

Next Story
வயிற்றில் குழந்தையுடன் கிரிக்கெட் விளையாடிய விஜய் டிவி சீரியல் நடிகை: வீடியோ சர்ச்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com