scorecardresearch

உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா… வைரலாகும் விஜயின் இந்தி குறித்த வசனம்

பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி குறித்து நடிகர் விஜய் பேசும் வசனம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ரசிகர்கள் அதிகாலை முதலே பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். பலரும் அரபிக் குத்து பாடலுக்கு தியேட்டர்களில் நடனமாடும் காணொலியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பீஸ்ட திரைப்படம் திருவிழா போல், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து நடிகர் விஜய் பேசிய வசனம் வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜென்ட் என்பதால், பல மொழிகளில் பேசக்கூடியவர். தீவிரவாதிகளுக்கு ஒவ்வொரு முறையில் தமிழில் பேசுவதை, இந்தி மொழியில் பேசி புரிய வைத்துகொண்டிருப்பார்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழக்கும் விஜய், ஏன்டா எல்லாத்தையுமா உனக்கு சொல்லணும். அட போடா! சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது. வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா என கூறுகிறார். இந்த காட்சிக்கு, தியேட்டரில் கைதட்டல்களும் விசிலும் பறக்கின்றன.

ஏனெனில், சில நாள்களாக மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சித்து வருவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டி வரும் நிலையில், பீஸ்ட் படத்தில் இந்தி மொழியை குறிப்பிட்டு விஜய் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

முன்னதாக, சூர்யாவின் ஜெய் பீம் படத்திலும் ஒரு காட்சியில் பிரகாஷ் ராஷ் இந்தியில் பேசும் ஒருவரை, தமிழில் பேசும்படி கன்னத்தில் அறையும் காட்சி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Beast movie vijay hindi imposition dialogue viral