scorecardresearch

காப்பியடித்து அந்த நிகழ்ச்சியில் பேசினாரா விஜய்? வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் நடந்த ‘பிஃகைன்ட்வுட்ஸ்’ கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில், 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் படங்கள் கொடுத்ததற்காக ‘இளைய தளபதி’ விஜய்க்கு ‘தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்’ எனும் விருது வழங்கப்பட்டது. அப்போது விவசாயிகளின் இன்றைய அவல நிலை குறித்து அவர் கூறிய கருத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுகுறித்து வெளியான மீம்ஸில் கூட, “ஒரு நடிகராக உங்களை பிடிக்காவிட்டாலும், ஒரு […]

காப்பியடித்து அந்த நிகழ்ச்சியில் பேசினாரா விஜய்? வைரலாகும் வீடியோ!
சமீபத்தில் நடந்த ‘பிஃகைன்ட்வுட்ஸ்’ கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில், 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் படங்கள் கொடுத்ததற்காக ‘இளைய தளபதி’ விஜய்க்கு ‘தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்’ எனும் விருது வழங்கப்பட்டது.

அப்போது விவசாயிகளின் இன்றைய அவல நிலை குறித்து அவர் கூறிய கருத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுகுறித்து வெளியான மீம்ஸில் கூட, “ஒரு நடிகராக உங்களை பிடிக்காவிட்டாலும், ஒரு தமிழராக எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள்’ என்பது போன்று ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஆனால், விஜய் பேசிய அதே கருத்துக்களை ‘விஜய் டிவி’யின் பிரபல காமெடி ஷோவான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில், ஒருவர் முன்பே கூறியிருப்பது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டு பேச்சுக்களையும் இணைத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

https://youtube.com/watch?v=bV24vAWLHcc

எது எப்படியோ… பேசினது வேற வேற ஆளா இருந்தாலும், பேசிய விஷயம் சரிதானே!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Behindwoods function vijay speech copy from another comedian script

Best of Express