scorecardresearch

அனுஷ்காவின் ‘பாகமதி’, சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்

அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’, சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

kalakalappu 2

அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’, சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. டிரெய்லரைப் பார்க்கும்போது, அனுஷ்கா நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘அருந்ததி’ படம் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், இரண்டுக்கும் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அனுஷ்காவின் ‘பாகமதி’ வருகிற 26ஆம் தேதி ரிலீஸாகிறது. பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட ‘கலகலப்பு 2’, தியேட்டர்கள் கிடைக்காததால் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bhaagamathie and kalakalappu 2 got ua censor certificate