புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா நடிகை… விஜய் டிவிக்கு ரொம்ப பெரிய மனசு!

Bharathi Kannamma Serial actress Sherin Janu நம்ம வீட்டு பொண்ணு தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் ஷெரின்.

Bharathi Kannamma Serial actress Sherin Janu got chance in one more Serial
Bharathi Kannamma Serial actress Sherin Janu got chance in one more Serial

Bharathi Kannamma Serial actress Sherin Janu got chance in one more Serial : டிஆர்பி டாப் ரேட்டிங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் நடிகைக்கு அதே சேனலில் வேறு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொலைக்காட்சி பொறுத்த வரையில் ஒரு சேனலிலிருந்து மற்றொரு சேனலுக்கு மாறும்போது, ஏற்கெனவே இருக்கும் சேனலிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் நீக்கப்படுவது சாதாரண விஷயம். ஆனால், ஒரே சேனலில் வெவ்வேறு தொடர்களில் நடிக்க வைத்து, பெருஞ் மனசுக்காரன் என்கிற பெயர் வாங்கியிருக்கிறது விஜய் டிவி.

பாரதி கண்ணம்மா தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷெரின் ஜானு, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வருகிறார். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் அதே விஜய் டிவியின் புதிதாக ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் ஷெரின்.

குறிப்பிட்ட அந்தத் தொடரின் நாயகன் சுர்ஜித், ஷெரினுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இந்த டபுள் ட்ரீட் செய்தியை உறுதி செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma serial actress sherin janu got chance in one more serial

Next Story
அப்போ அந்த செய்தி வதந்தியா? கெத்தாக திரும்பிவந்த ‘செம்பருத்தி’ அகிலாண்டேஸ்வரி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X