பிக் பாஸ் 2 : இருந்தாலும் கமல் இப்படி உளறியிருக்க கூடாது!

பிரபலமான தனியார் சேனல் ஒன்றில் இந்த மாதம் பிக் பாஸ் சீசன் 2 தொடங்கப்போகுது. ஜூன் மாதம் 17ம் தேதி முதல் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் வீட்டு டிவிகளில் டெலிகேஸ்ட் ஆக போகுது ‘டுப்பு சிக்கு டுப்பு சிக்கு பிக் பாஸ்’. இந்த சீசன் 2 பற்றி பேச ஆரமிச்ச நாளிலிருந்தே பிக் பாஸ் டீம் புதுசா புதுசா எதையோ சொல்லி நம் அனைவரையும் ரொம்ப கன்ஃப்யூஸ் பண்ணிட்டு வர்றாங்க.

முதல் ப்ரமோல ‘அடடா என்னா கருத்து’-னு மூச்சு விடுறதுக்குள்ள, ‘கருத்து இல்ல ஆப்பு’-னு நமக்கு பல்ப் கொடுத்தாங்க. அப்போவே நமக்கும் தெரிஞ்சிப்போச்சு இந்த பிக் பாஸ் 2-ல் வில்லங்கம் புடிச்சவங்க இருப்பாங்கனு. இந்த ஷோவில் கலந்துக்க போறவங்க பெயரெல்லாம் நிறைய வெளிய வர ஆரமிச்சாச்சு. இவ்வளவு எதிர்ப்பார்ப்போடு கூலா இருந்த நம்மள அந்த ஷோ ஆண்டவர் மறுபடியும் குழம்ப வச்சிட்டாரு.

நேற்று வெளியான ஒரு ப்ரமோவில், ‘இவங்களா வர்றாங்க? வீடு ரனகளம் தான்’ என சொல்லியிருந்தாரு கமல் ஹாசன். இவரே பார்த்து அலறும் அளவுக்கு யாரு அந்த போட்டியாளர். சரி, இது தான் ஒரு டிசைன் என நினைச்சுட்டு இருந்த இன்று இன்னொரு அட்டாக். இன்னொரு ப்ரமோ. ‘சிலர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு-னு பேசுவாங்க, ஆனால் சிலர் வெயிட் பண்ணி சிரிச்சிட்டே துண்டு துண்டா ஆக்கிடுவாங்க.’ சொல்லிருக்காரு கமல்.

இந்த ப்ரமோவில் இருந்து ஒன்று மட்டும் உறுதி. வெளிப்படையா பேசுற ஒரு ஆளு இருக்காங்க. ஆனா வம்புக்கு இழுக்கனும்னு நினைக்குறவங்கள வெயிட் பண்ணி வச்சு செய்யுற இன்னொரு ஆளும் இருக்க போர்றாங்க. அதே போல முன்பு இருக்கும் ப்ரமோவில், ‘ஐட்டம் நம்பரெல்லாம் இருக்கா?’ என கமல் கேட்டிருக்காரு. ஸோ, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிக்கா நிச்சயம் வருவாங்கனு நாம எதிர்பார்க்கலாம். எது எப்படியோ, ஆடியன்ஸ் நாங்க பாவம். இப்படி ஷாக் மேல ஷாக் குடுத்தா என்ன ஆவது. கொஞ்சம் மூச்சு விட விடுங்க பாஸ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close