Bigg Boss 2 Tamil Finale Winner : கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 சீசன் நிகழ்ச்சி 105 நாட்களை கடந்து இன்று நிறைவு பெற்றது.
பிரபல தனியா தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிக்ழச்சி ஆகும். இந்தி மொழியில் 12 சீசன்களை கடந்து ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் முதன் முதலாக தமிழில் ஒளிபரப்பாகியது.
Bigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 வெற்றிப் பெற்ற போட்டியாளர் யார்?
பிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிக் பாஸ் 2 வும் ஆரம்பமானது. முதலில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி மேலும் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முழுமையாக 105 நாளை கடந்து இன்று 106 வது நாள் இறுதி நாளாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், சீசன் 2 பட்டத்தை யார் தட்டிச் செல்கிறார் என்று அறிவிக்கப்படுகிறது.
இன்றைய இறுதி நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை நொடிக்கு நொடி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்குகிறது.
12.00 PM : “உங்களில் ஒருவராக நினைத்து எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் போட்டி போடுங்க கண்டிப்பாக வெற்றி உங்களை தேடி வரும். என்னுடன் சேர்ந்து விளையாடிய அனைத்து போட்டியாளருக்கும் இந்த வெற்றி சமர்ப்பனம்.” என்று வெற்றி உரையாற்றினார்.
11. 50 PM : பிக் பாஸ் 2 போட்டியை வென்றார் ரித்விகா.
Bigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா
11.35 PM : கனத்த இதயத்துடன் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேற, இதுவரை பிரகாசமாக இருந்த வீட்டின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டது. இருவரும் கண்கள் கலங்கிய நிலையில், ‘மிஸ் யூ பிக் பாஸ்’ என்று கூறி விடைப்பெற்று கொண்டனர்.
11.25 PM : பிக் பாஸ் 2 வீட்டை விட்டு ஐஸ்வர்யா மற்றும் ரித்விகாவை அழைத்து செல்ல வீட்டிற்கு வந்தார் கமல் ஹாசன்.
11.20 PM : ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா… இவர்கள் இருவரில் ஒருவர் இன்னும் சில நொடிகளில் வெற்றி பட்டத்தை தட்டிச் செல்ல தயாராக உள்ளனர்.
10.50 PM : பிக் பாஸ் 2 நிறைவு நிகழ்ச்சியை மேலும் அலங்கரிக்க, பிக் பாஸ் முதல் சீசன் நாயகி ஓவியா வந்தார். ரசிகர்கள் அனைவரும் அரங்கமே அதிரும் வகையில் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
10.30 PM : 100 நாட்கள் கடந்து வந்த போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
10.10 PM : மூன்று போட்டியாளர்களில் ஒருவரை எவிக்ட் செய்து வெளியே கூட்டிச் செல்ல கடந்த சீசன் வெற்றியாளர் ஆரவ் உள்ளே வந்தார். ஐஸ்வர்யா, விஜி மற்றும் ரித்விகா ஆகிய மூன்று பேரில், விஜயலட்சுமியை வெளியே அழைத்து வந்தார்.
9.50 PM : இறுதி நாளிலும் சூடு பிடித்த பிக் பாஸ் 2. போட்டியாளர்களின் உறவினர்கள் பிற போட்டியாளர்களை கேள்வி கேட்கின்றனர். இதில் மும்தாஜ் சகோதரர் நித்யாவை கேள்வி கேட்க, விவாதம் சூடு பிடித்து சண்டையாக மாறியது.
9.10 PM : பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் 100 நாட்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சிறிய ரீக்கேப் காட்டும் வகையில் நகைச்சுவை நாடகம் ஒன்றை நிகழ்த்தினர்.
9.00 PM : பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த அனைவரிடமும் சிறிய விளையாட்டு விளையாடினார் கமல் ஹாசன். முதல் முறையாக கமல் ஹாசன் போட்டியாளர்கள் போல நடித்தும், போட்டியாளர்கள் கமல் ஹாசன் போலவும் நடித்தனர். பின்னர் அனைவருக்கு மறக்க முடியாத தருணங்களை குரும்படமாக ஒளிபரப்பினர்.
8.40 PM : முதல் வாரத்தில் இருந்து எந்த வரிசையில் எவிக்ட் ஆனார்களோ, அதே வரிசையில் ஒவ்வொருவராக நடனம் ஆடிக்கொண்டே உள்ளே நுழைந்தனர். முதலில், மமதி சாரி, பின்னர் அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா, ஷாரிக், வைஷ்ணவி, மகத், டேனியல், சென்றாயன், மும்தாஜ், பாலாஜி, யாஷிகா.
8.25 PM : இறுதி நாள் என்பதால் கமல் ஹாசனுக்கு மட்டுமல்ல, பிக் பாஸ் 2 போட்டியில் நேற்று வரை கடந்து வந்த அனைத்து போட்டியாளர்களும் ஆடல் பாடலுடனே மேடைக்கு வந்தனர்.
8.15 PM : இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கம் கேள்வி மற்றும் பதில்களுடன் தொடங்கியது. இறுதி நிகழ்வை நேரில் காண வந்திருந்த பொதுமக்கள் முதலில் கமல் ஹாசனிடம் சில கேள்விகளை கேட்க, பின்னர் தனித் தனியாக போட்டியாளர்களிடமும் உரையாடினர்.
8.05 PM : நடன கலைஞர்கள் அரங்கையே அதிர வைக்க, தமிழர்களின் அடையாளமாக பாரம்பரிய வேட்டி சட்டையில் விருமாண்டி பாடலுடன் நுழைந்தார் கமல் ஹாசன்.
நிறைவு விழாவில் கமல் ஹாசன்
8.00 PM : பிக் பாஸ் 2 தமிழ் போட்டி நிறைவு விழா தொடங்கியது. தமிழ் பாரம்பரியத்தை உயர்த்தி நிருத்தும் வகையில், கிராமத்து மண் வாசனையை நினைவுக்கு கொண்டு வர, பாரம்பரிய நடனத்துடன் தொடங்கியது.
7.45 PM : இன்றைய நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் முதல் சீசனில் தமிழக மக்களின் மனங்களை வென்ற ஓவியா வருகிறார்.
7.30 PM : இறுதிச் சுற்றுக்கு ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா என 4 பேர் தேர்வாகினார்கள். இந்நிலையில் நேற்று 4 பேரில் ஒருவர் வெளியேற்றம் நடந்தது. அதில் குறைந்த வாக்குகள் பெற்று ஜனனி வெளியேறினார்.
7. 00 PM : ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று 106வது நாளில் இறுதி சுற்றுடன் நிறைவடைகிறது.