பிக் பாஸ் தமிழ் 2: 'பிரெண்டே... லவ் மேட்டரே’ பாலாஜியை கலாய்க்கும் கமல் ஹாசன்

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி முதல் வாரம் முடிவில் கமல் அனைவரிடமும் பேசிகிறார். இதில் பாலாஜியை போட்டியாளர்களுடன் இணைந்து...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களின் 100 வாழ்க்கை முழுமையாகத் தொடங்கியது 18ம் தேதி தான். அன்று காலை ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்’ என்ற பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுவது வழக்கமான ஒன்று. அதே போலவே பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியிலும் முதல் வாரத்தின் இறுதியில் போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசினார்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 கமல் ஹாசன்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 கமல் ஹாசன்

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் நேற்று (சனிக்கிழமை) போட்டியாளர்களைச் சந்தித்து ‘அகக்கண்’ வழியான பேசினார். அது என்ன அகக்கண்? அது வேறு ஒன்றுமில்லை. கடந்த சீசனில் அஹம் டிவி, இந்த சீசனில் அகக்கண்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 போட்டியாளர்கள்

இப்படி நிகழ்ச்சியின் வார இறுதியில் போட்டியாளர்களிடம் கமல் அப்படி என்ன பேசியிருப்பார் என்று பலருக்கு தோன்றலாம். ஆனால் நாம் அனைவரும் நினைத்தது போலவே ஒரு வெங்காயமும் தவிர வேறு எதுவுமில்லை. சென்ற வாரத்தில் வெடித்த வெங்காயம் பிரச்சனையை மட்டுமே பேசினார்கள். இதில், போட்டியாளர்கள் அனைவரின் தரப்பையும் கேட்க, நித்யா பக்கம் இருந்த சங்கடத்தையும் புரிந்துகொள்கிறார் கமல்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2: நித்யாவுடன் கமல் உரையாடல்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2: நித்யாவுடன் கமல் உரையாடல்

பிறகு மும்தாஜ் – ஷாரிக் பாசப் பிணைப்பு, வைஷ்ணவி சந்தித்த சோதனைகள், டேனியல் – யாஷிகாவின் பாராட்டு எனச் சிறப்பாக சென்றது. இப்படி அமைதியாகவும், சற்று கண்டிப்புடனும் கடந்த நேற்றை பிக் பாஸ், இன்று எளிமையாகவும், பல காமெடிகளுடனும் கடக்க உள்ளது. குறிப்பாக டேனியல், யாஷிகா மற்றும் ஐஷ்வர்யா ஆடும் ‘பேபி பேபி’ பாடலின் ரசிகனாக மாறியிருக்கிறார் கமல்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று மீண்டும் உரையாடுகிறார் கமல். இன்றைய கமல் ஹாசன் கேமில், ஒவ்வொரு அட்டையிலும் ஒரு அடை மொழி எழுதப்பட்டிருக்கும். அதில் இருக்கும் அடை மொழி யாருக்குப் பொருந்தும் என்று போட்டியாளர்கள் கூற வேண்டும். அப்போது காதல் மன்னன் என்ற பெயர் வந்ததும், வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்தியநாதன் பாலாஜி பெயரைக் கூறுகிறார். இதன் பிரமோ இன்று வெளியாகியுள்ளது.

அப்போது, போட்டியாளர்களுடன் இணைந்து கமல் ஹாசனும் பாலாஜியை, ‘பிரெண்டே…லவ் மேட்டரு…நமக்கே தெரிஞ்சிருச்சே’ என்று கேலி செய்கிறார். நேற்றைய எபிசோட் சிறிது ரணகளத்தை சந்தித்திருந்தாலும், இன்றைய எபிசோட் சற்று கலகலப்பாக செல்ல இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close