/tamil-ie/media/media_files/uploads/2018/06/oviya.jpg)
bigg boss 2 tamil Oviya - பிக் பாஸ் 2 ஓவியா
Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று தொடங்குவதை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அனைத்து மக்களுக்கும், விஜய் டிவி ஒரு இனிமையான ஷாக் கொடுத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/oviya-2.jpg)
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்வது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் புதிதாய் 17வது போட்டியாளரைக் களம் இறக்குகிறது பிக் பாஸ் 2 டீம். யார் அது? கடந்த பிக் பாஸ் சீசனில் அனைவரின் மனதையும் அன்பால் கட்டிப்போட்ட ஓவியா தான் அது. பிக் பாஸ் 2 தமிழ் போட்டியில் 17வது நபராகப் பங்கேற்கிறார் ஓவியா. இதற்காக பிரமோ வெளியாகியுள்ளது.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா! ???????? #VivoBiggBoss - இன்று இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan@OviyaaSweetz#BiggBossTamil@Vivo_India#TheGrandOpeningpic.twitter.com/tY9hqz0xQr
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்றாலே ஓவியாவை தவிற வேறு யாரையும் நினைக்க முடியாத அளவிற்கு அவர் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் இவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மக்கள் கொதித்தெழுந்தனர். தற்போது பிக் பாஸ் 2 சீசனில் மீண்டும் ஓவியா என கேள்விப்பட்டவுடன் மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.