பிக் பாஸ் 2 வீட்டை விட்டு முதலில் வெளியேறும் நபர் இவர் தானா?

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் சீராக கடந்துள்ள நிலையில், மூன்று போட்டியாளர்கள் இன்று எவிக்‌ஷன் சுற்றை...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று முதல் எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று நடைபெறும் இந்த எவிக்‌ஷன் சுற்றை 3 பேர் எதிர்கொள்கின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி துவங்கியதில், இன்றுடன் இரண்டு வாரங்கள் சிறப்பாக கடந்துள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இப்போட்டியில் இந்த வாரம் 4 பேர் எவிக்‌ஷன் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி, மும்தாஜ் ஆகியோர் எவிக்‌ஷனுக்கு தேர்வாகினார்கள்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 4 பேரில் பொன்னம்பலம் எவிக்‌ஷன் சுற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதாகக் கமல் ஹாசன் தெரிவித்தார். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மீதம் இருக்கும் 3 போட்டியாளர்களில் ஒருவர் பிக் பாஸ் தமிழ் 2 வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். இதற்கான பிரமோ இன்று வெளியாகியுள்ளது.

16 போட்டியாளர்கள் இணைந்து இவர்களைத் தேர்வு செய்திருந்தாலும், போட்டியில் யார் தொடர வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்று கமல் தெரிவித்தார். கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க் அனைத்திலும் மும்தாஜ் மற்றும் மமதி சாரி விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டனர். மேலும் பொதுமக்கள் இடையே மும்தாஜ்க்கு வெகுவாக ரசிகர்கள் இருப்பதால், அவருக்கு போதுமான அளவிற்கு ஆதரவு இந்த வாரம் வரை இருந்து வருகிறது.

எனவே இந்தச் சூடான சுற்றில், நெருப்பில் நிற்பது போல நிற்கிறார்கள் அனந்த் வைத்தியநாதன் மற்றும் மமதி. நெட்டிசன்கள் பலரும் மம்தி சாரி தான் இந்த வாரம் எவிக்ட் ஆக உள்ளார் என்று கூறி வருகின்றனர். இது உறுதியான தகவல் இல்லையென்பதால், போட்டியில் இறுதி விளிம்பில் நிற்பது வாய்ஸ் எக்ஸ்பர்டா அல்லது தமிழ் பெண்ணே என்பதைக் காத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close