By: WebDesk
Updated: May 31, 2019, 12:52:23 PM
Bigg Boss 3: நடிகர் கமல் கடந்த 2017-ம் ஆண்டு சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். முதன் முதலில் தமிழுக்கு அறிமுகமான அந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் கமல். இது முதல் சீசன் போல் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே மக்களவை மற்றும், சட்ட மன்ற இடைத்தேர்தல்களில் படு பிஸியானார் கமல். அதோடு தனது கட்சியான மக்கள் நீதி மய்யத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தினார்.
இதன் காரணமாக, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற கருத்துகள் நிலவி வந்தன.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இதன் ப்ரோமோ வெளியாகி, அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss 3 kamal haasan start date confirmed