/tamil-ie/media/media_files/uploads/2020/10/Rio.jpg)
Vijay tv Bigg Boss 4 Tamil Rio Raj
Bigg Boss 4 Tamil Review Day 8: பொதுவா பெட் கிடைக்கலைனாதான் சண்டை வரும் ஆனால், இங்க பெட் வேண்டாம்னு சண்டை வருது. 'இந்த பையன் அமைதியாகவே இருக்கிறானே சீண்டிப் பார்ப்போமா' என நினைத்துவிட்டாரோ என்னவோ, சுரேஷின் அடுத்த டார்கெட் ரியோ. இந்த கொலைவெறி சண்டையோடுதான் ஏழாம் நாள் முடிந்தது. அடுத்த நாள் ரியோ கோபப்பட்டதற்குக் காரணம் இந்தச் சண்டையாக இருக்குமோ! சரி பார்க்கலாம் வாங்க.
'எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..' பாடலோடு ஆரம்பமான எட்டாம் நாள் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. நாமினேஷன் டாஸ்க் இருக்கிறதே. ஆனால், அதற்கு முன்பு 'லக்ஸ்ஜூரி' பட்ஜெட் டாஸ்க் இருந்தது. பயங்கரமாக பிக் பாஸுக்கு போர் அடிக்கும்போல. ஒட்டு மொத்தமாக 3200 பாயிண்ட்ஸ் கொடுத்துவிட்டு அதற்கான பொருள்கள் லிஸ்ட்டை காட்டிவிட்டு இறுதியில் வீட்டில் பூட்டப்பட்டிருக்கும் ஆண்கள் படுக்கை அறை, கழிவறை சாவிகள் வேண்டுமா, பொருள்கள் வேண்டுமா எனக் கேட்டு வெறுப்பேத்துவதெல்லாம்.. ஏன் இந்த வேலை பிக் பாஸ்! (நாங்க வெறுப்பாகவே இல்லையே!).
Bigg Boss 4 Tamil Day 8 Review an Nominationசுரேஷ் லிஸ்ட்டில் இன்னும் சனம் 'அவுட்' ஆகவில்லை. 'என்னை கார்னர் பண்ணுறீங்களோ'ன்னு சுரேஷ் ஃபீல் பண்ணது நமக்கெல்லாம் கொடுத்த ஹார்ட் பிரேக். ஒருவழியாக எவிக்ஷன் ப்ராசஸ் ஆரம்பமானது. பிக் பாஸ் வரலாற்றிலேயே 11 வாக்குகளைப் பெற்று, ஹவுஸ்மேட்ஸின் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கிறார் சனம் ஷெட்டி. சம்யுக்தா வேற லெவல் போட்டியாளராக இருக்கக்கூடும் என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால், ரேகா சொன்ன காரணம் மட்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.
ஒரே துறையில் இருக்கும் சம்யுக்தா மற்றும் சனம் இருவரையும் பாலா நாமினேட் செய்தது ஒருவித பொறாமையாக இருக்குமோ! ரம்யா -ரேகாவிற்கு இடையில் பனிப்போர் இருப்பதாகத் தெரிகிறது. இருவரும் மாற்றி மாற்றி நாமினேட் செய்துகொண்டார்களே. வரும் வாரங்களில் வேற மாதிரி ரம்யாவைப் பார்க்கலாம் ரேகா வீட்டிற்குள் இருந்தால்.
Bigg Boss Tamil 4, Balaji Murugadoss'தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் யாருடனும் ஒட்டவே மாட்டிங்குறார்' என்ற அடிப்படையில் ஷிவானி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார். பேசவில்லை என்றாலும், நிச்சயம் இவர் டஃப் போட்டியாளராகத்தான் இருக்கிறார். 'பொய்யாக இருக்கிறார்' என்றுகூறி ரேகாவை பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுத்தனர். வயது, அதனால் கவனக்குறைவு என்கிற அடிப்படையில் ஆஜீத்திற்கு ஓட்டுகள் கிடைத்தன. அவருடைய மிகப்பெரிய ப்ளஸ்ஸும் வயதுதான் என்பதைப் புரிந்து விளையாடினால் நிச்சயம் இறுதிச் சுற்றிச் செல்வதற்கான வாய்ப்பு ஆஜீத்திற்கு உண்டு.
அடுத்ததாக மிஸ் / மிஸ்டர் பிக் பாஸ் போட்டி. சனம் மற்றும் பாலா நடுவர்களாக இருக்க, அனைத்துப் போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆனால், சம்பந்தமே இல்லாமல் ரியோ ஏன் சுரேஷ் மீது கோபப்பட்டார் என்பதுதான் புலப்படவே இல்லை. அவ்வளவு கோபமடையும் அளவிற்கு சுரேஷ் தவறாகவும் பேசவில்லை.சுரேஷின் எனர்ஜியும் குறைந்தே காணப்பட்டது. என்ன பிக் பாஸ், ரியோவைத் தனியாகக் கூப்பிட்டு 'உனக்கு கோவமே வரல, சான்ஸ் கிடைச்சா நல்லா கோவப்படு. நாங்க ப்ரோமோல போட்டுடறோம்'னு சொல்லி ஏதாவது வகுப்பு எடுத்தீங்களா? அல்லது சுரேஷ்கூட எவ்வளவு நாள்தான் பெண்களே சண்டைபோடுவது ஆண்களும் போடட்டுமே என்று கொளுத்திபோட்டீங்களா?
Bigg Boss Tamil 4 Rio Rajஅமைதியாக இருந்த ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் இந்த மிஸ்/மிஸ்டர் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண, அனைவரும் சந்தோஷமாகவே வெளியேறினர். (மொத்தத்தில் எல்லாமே ஸ்க்ரிப்ட் போன்றே தோன்றியது). நிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு நேற்றைய பிக் பாஸ் நிறைவடைந்தது.
சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, கேபி, ஆஜீத், ரம்யா ஆகிய இவர்களில் யார் முதலில் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us