‘காதல் கண்ணை மறைக்குது’, ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ – பற்றவைத்த பிக் பாஸ்

‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்ற வாக்கியத்தை வைத்துப் பாடல் எழுத சுச்சி முயன்றபோது, பாலாவின் பங்களிப்பு ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi Anita Bala Rio Shivani Som Day 43 review 
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivani Day 44 review

Bigg Boss 4 Tamil Review Day 43 : எரிமலையாக வெடித்துச் சிதறும் என்கிற எதிர்பார்ப்பில், குளிர்ந்த நீரை ஊற்றி அணைத்துவிட்டார் ரியோ. பாலாவுக்கும் ரியோவுக்கும் சண்டை என்றபோதே நாம் யூகித்திருக்க வேண்டும் நிச்சயம் இந்த சண்டை அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்காது என்று. என்ன செய்ய! ரியோவின் ஸ்ட்ராடஜி அப்படி. ஒருவழியாக பிக் பாஸ் வீட்டில் காதல் ஓபனாகிடுச்சுப்பா. வழக்கம்போல ஒத்துக்க மாடீங்கறீங்களே! சரி வாங்க இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அலாசுவோம்!

முந்தைய நாளின் சோம் அனிதா பேச்சுவார்த்தையோடு ஆரம்பமானது நேற்றைய எபிசோட். ரியோ பற்றி அனிதா புலம்பிக்கொண்டிருக்க, ரமேஷிடம் ரியோ விவாதித்துக்கொண்டிருந்தார். கடந்த வாரம் கண்டுக்கவே இல்லை என்கிற புகாருக்கு, அனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் சோம். ஆக மொத்தத்தில் அனிதாவை புரிஞ்சிக்குற ஒரே ஆள் சோம் மட்டும்தான் (ஸ்ட்ராங் பில்டிங்தான்).

ஆனா, இந்த கலவரத்துக்கு இடையில் அர்ச்சனா ஸ்கோர் செய்துவிட்டார். அனிதா மீது என்ன கடுப்போ தெரியவில்லை, சோம் சேகர் அனிதாவிடம் பேசியதை சீனுக்கு இழுத்துவிட்டு, ‘உனக்காக சோம் அனிதாவிடம் பேசலாம்ல’ என ரியோவை உசுப்பேத்திவிட்டது சுத்தமாக செல்லுபடியாகவில்லை. நல்ல கேள்வி என்றாலும், ‘எனக்காக ஏன் சோம் பேசணும்’ என்ற ரியோவின் பதிலும் நெற்றியடி. எல்லாம் ஒருவித கவனஈர்ப்பு செயல்போலதான் இருக்கிறது. என்னதான் சொல்லுங்க, இரவு நேரத்தில் அனைவர்க்கும் விபூதி அடிக்கத் தவறுவதில்லை அர்ச்சனா. பார்த்து.. உங்களுக்கு அடிச்சிடப் போறாங்க அர்ச்சனா மேடம்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi Anita Bala Rio Shivani Som Day 43 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi

‘ஹார்ட்டுக்குள்ள பச்ச குத்தியே..’ என்ற பாடலோடு தொடங்கிய நாற்பத்து மூன்றாம் நாள், அனிதாவின் ஃபீலிங்கோடு தொடங்கியது (நாங்கல்லாம் பாவம் பிபி). எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ரியோவிடம் அனிதாவின் பருப்பு வேகவில்லை. அதைத் தெளிவாகவே கையாண்டு வருகிறார் ரியோ. ‘இனிமே அனிதாவிடம் நானாகப் போய் பேச மாட்டேன். முக்கியமாக ஏமாறவே மாட்டேன்’ என்கிற சபதத்தை எடுத்திருப்பார் போல. நல்ல முடிவு ரியோ!

இந்த வீட்டுல சாப்பாடு பிரச்சனை ஒயாதுபோல. நேற்று தோசைக்காக சுச்சி பாலாவுக்குச் சண்டை. ‘உன் தட்டுலலாம் சாப்பிட முடியாது’ என்ற டோன், சுச்சிக்கான பெரிய நோஸ் கட். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நாமினேஷன் டாஸ்க். அனிதாவைவிட ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுச்சி முன்னிலையில் இருந்தார். ‘மாத்தி மாத்தி பேசுறாங்க’, ‘ஓவர் ரியாக்ட் பண்ணுறாங்க’, ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’, ‘காதல் கண்ணை மறைக்குது’, ‘விமர்சனத்தை ஏத்துக்க மாட்டிங்குறாங்க’, ‘புது பிரச்சனைகளை உருவாக்குறாங்க’, ‘நான்-சிங்க்குல போறாங்க’ என இப்படிப்பட்ட வாக்கியங்களைக் கூறி நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என அவ்வளவு அழகாகக் கொளுத்திப்போட்டார் பிக் பாஸ். எல்லோரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் ரசித்து என்ஜாய் செய்துகொண்டிருந்தபோது, பாலாவுக்கு மட்டும் கோவம் சீறிப்பாய்ந்து வந்தது (எமோஷனை குறைங்க பாலா ப்ளீஸ்).

Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi Anita Bala Rio Shivani Som Day 43 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivani

சம்பந்தப்பட்ட ஷிவானியிடம் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை. அப்புறம் எதுக்கு பாஸ் இவ்வளவு கோவம். அப்போது கோவத்தில் பாலா சொன்ன ‘கிறுக்கு பசங்க’ வார்த்தையை ‘காதை கிழிச்சிடுவேன்’ என மாற்றிப் புரிந்துகொண்டார் ரியோ. இதற்காகக் கண்ணாடிக் கதவு என்ன பாவம் பண்ணுச்சோ! பார்த்து ரியோ.. ரெட் கார்டு கொடுத்துட்டு போறாங்க (கொடுத்துட்டாலும்).

‘காதல்லாம் ஒண்ணுமில்லை. அப்படி இப்படி..’ என பாலா சில ஹவுஸ்மேட்ஸிடம் டிஸ்கஸ் செய்துகொண்டிருக்கும் போது, ‘காதல் கண்ணை மறைக்கிறது’ என்ற வாக்கியத்தை முன் வைத்த அந்த மெயின் கல்ப்ரிட் ஆரியும் மீட்டிங்கில் இருந்ததுதான் ஹயிலைட்.

‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்ற வாக்கியத்தை வைத்துப் பாடல் எழுத சுச்சி முயன்றபோது, பாலாவின் பங்களிப்பு ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இதற்குப் பேர்தான் பொஸசிவ்னெஸ்ஸா! நடக்கட்டும் நடக்கட்டும். சூழ்நிலைக்கு ஏற்றபடி ‘காதல் கனவே தள்ளிப் போகாதே..’ பாடலை ஷிவானி பாடினாரா அல்லது எடிட்டர் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஒட்டிவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், நீங்க நல்லா விளையாடுறீங்க பிக் பாஸ்.

என்னதான் ஆக்ரோஷமாக நடந்துகொண்டாலும் பாலா என்ன சொன்னார் என்பதைப் பிற்பாதியில் பாலாவிடம் தெளிவாகக் கேட்டுக்கொண்டார் ரியோ. ஆனால், கிறுக்கு பசங்க பாயின்ட்டை சாமர்த்தியமாக மறைத்துவிட்டார் பாலா. (கேடி பாய்). சுச்சி, அனிதா, ரியோ, பாலா, சம்யுக்தா, சோம் மற்றும் ஆரி ஆகிய ஏழு பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னதான் அனிதா வெளியே சிரித்து விளையாடிக்கொண்டிருந்தாலும், நாமினேஷனில் தன் பெயர் வந்துவிட்டதே என உள்ளுக்குள் அழுவது நன்றாகவே தெரிகிறது. இந்த வாரம் சுச்சி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அனிதாவிற்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும், இப்போதைக்கு கன்டென்ட் கொடுக்கும் நபர்களில் ஒருவராக இருப்பதனால், அனிதாவை அனுப்ப பிபிக்கு மனம் வராது. பொறுத்திருந்து பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil bala rio suchi archana anita som day 43 review

Next Story
45 மணி நேர டாஸ்க்: கடினமான தருணத்தை எதிர்க்கொள்ளும் போட்டியாளர்கள்!Bigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com