Bigg Boss 4 Tamil Vijay Tv Day 35 Review : காரசாரமான ப்ரோமோ இருந்தாலே மெயின் பிக்ட்சரில் நம்மை ஏமாற்றிவிடுவார் பிக் பாஸ். நேற்று இரண்டே ப்ரோமோதான் வெளியானது. அதிலும் கன்டென்ட் இல்லை. ஆனாலும், நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஏதாவது கன்டென்ட் மறைத்து வைத்திருப்பாரோ என்கிற ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் ஹாட்ஸ்டாரை திறந்தால், தூ(து)க்கம்தான் தலைக்கேறியது. ஆரியும் பாலாவும் மூன்றாம் உலகப்போர் ரேஞ்சிற்கு சண்டைபோடுவதில் தொடங்கிய எபிசோட், சுரேஷ் தாத்தாவின் வெளியேற்றத்தில் நிறைவடைந்தது. இதை மீறிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்றாலும், ஏன் கமல் நாம் நினைத்ததுபோல சுச்சி, பாலாவை கேள்வி கேட்கவில்லை என்பதை டிஸ்கஸ் செய்வோம் வாங்க!
வைல்ட் கார்ட் என்ட்ரிகள் ஏன் தள்ளியே இருக்கீங்க, ஒண்ணா சேர்ந்து சதி பண்ணுங்க அப்போதான் கொளுத்திப் போட வசதியாக இருக்கும் என்கிற 'ஹின்ட்டை' எடுத்துக்கொடுப்பதில் ஆரம்பித்தது கமலின் பிரச்சாரம். நாம் அனைவரும் எதிர்பார்த்த நீதிமன்ற சீன் பற்றிப் பேசத்தொடங்கினார் உலக நாயகன். வசமாக சுச்சி மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரம்யா பாண்டியனைவிடச் சிரித்து மழுப்புவதில் கில்லாடியாக இருக்கிறார் சுச்சி. அதிலும், கமல் கூறித்தான் வீட்டை ஒரு வழி பண்ணுகிறேன் எனக் கமலையே குற்றவாளியாக மாற்றியதெல்லாம் வேற லெவல் ஸ்ட்ராடஜி. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்பதுபோல இருந்தது கமலின் ரியாக்ஷன்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Aari Suchi Day 31 review
நீதிபதி நேர்மையாக இல்லை எனக் குற்றச்சாட்டு வைத்ததற்கு, "நான் ஹவுஸ்மேட்ஸ் போல விளையாடினேன்" எனக் கூறினார் சுச்சி. ஆனால், சனம் பேசும்போது மட்டும் தான் ஒரு நீதிபதி என்கிற 'ஆணவ' பதில் வந்ததே, அதை ஏன் கமல் கேட்கவில்லை? சுச்சி நம்ம மேலயே பழி போடுறாங்க, இதெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டுனு ஒதுங்கிட்டாரோ! பாலா என்னுடைய ஃபேவரைட், ஆனால் அதெல்லாம் நீதிமன்றத்துக்குள் எடுத்து வரவில்லை என்று சுச்சி கூறியது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்ததா? நமக்குக் காட்டப்பட்ட எல்லா வழக்குகளிலும் பாலா நின்ற பக்கம் மட்டுமே தீர்ப்பு சாதகமாக அமைந்தது. அதிலும் திடீரென சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலா நின்றதெல்லாம், எதிரில் இருந்த சுரேஷ் மீதான தாக்கமே தவிர சனம் ஷெட்டிக்கான ஆதரவு அல்ல. மொத்தத்தில் நீதிமன்ற காட்சியைப் பற்றிப் பேசவேண்டும் என்பதற்காகவே பேசினார்களே தவிர, மையத்திலும் நியாயம் இல்லாமலே போனது!
அது என்ன மாயமோ தெரில, ஆரி பெயரைக் கேட்டாலே 'ராட்சசியாக' மாறிவிடுகிறார் சம்யுக்தா. அதையும் நம் எடிட்டர் நண்பர் ஜூம் வைக்கத் தவறுவதில்லை. 'ஆரி சேவ்டு' என பட்டுனு போட்டுடைத்தார் கமல். அதனைக் கேட்டதும் கண்கலங்கி எமோஷனலாகி, 'பாலாவை எனக்கு நிறையப் பிடிக்கும், ஆனா..' என மறுபடியும் ஓர் அர்ச்சனா-பாலா ரீகேப் சீன் அரங்கேறியது. 'இது உலக மகா நடிப்புடா சாமி' என்ற மைண்ட் வாய்ஸ் யாருக்கும் வரவே இல்லை (உண்மையாகத்தான்!). பிறகு சம்யுக்தாவிடமும் மன்னிப்பு கேட்டு அமர்ந்தார் ஆரி.
Bigg Boss 4 Tamil Vijay Tv Samyuktha and Aari
கோர்ட்டில் 'தறுதலை' என்ற வார்த்தையை உபயோகித்ததற்காக ஆரி மீது பழி போட்டு, அதைப் பெரிய பிரச்சனையாகவே இழுத்துவிட்டார் சம்யுக்தா. அதற்கான காரணத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக எடுத்துரைத்தார் ஆரி. ஆனால், இதன் தொடக்கப்புள்ளியான பாலா, சனம் ஷெட்டியிடம் மன்னிப்பும் கேட்கவில்லை, அதற்காக வருத்தப்படவுமில்லை. இதைப் பற்றி ஏன் கமல் எதுவும் கேட்கவில்லை? ஆக, பாலா சொல்வதைத்தான் பிக் பாஸ் கேட்கிறார்! அப்படித்தானே பிபி!
சுரேஷ்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் என அறிவித்ததும், 'அப்பாடா' என்ற பாடி லேங்குவேஜ்ஜில் படபடவென கிளம்ப ஆரம்பித்தார் சுரேஷ். 'நான் போறதுக்கு ஒரு காரணம் இருக்கு' என சனம் ஷெட்டியிடம் ஹின்ட் கொடுத்தார் தாத்தா. பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப்போடும் வேலை வெற்றிகரமாக முடிந்து, அடுத்து குக் வித் கோமாளி சீசன் 2-ல் கலக்கபோகிறார் என்கிற பேச்சுக்கள் வலைத்தளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. இங்கு விட அந்த ஷோவில் சம்பளம் அதிகமோ! அப்படினா மக்களாகிய எங்கள் வோட்டுக்கு என்ன மதிப்பு பிக் பாஸ்?
Bigg Boss 4 Tamil vijay Tv Suresh Chakravarthy
'நல்ல உணவைச் சாப்பிடாமல் இருங்க, ஆடம் பிடியுங்க, உடல்நலத்துல பிரச்சினை வரும் அப்படியே நாங்க உங்களை வெளியே கூட்டிட்டு வந்துடுறோம்' என பிக் பாஸ் பிளான் போட்டு, சுரேஷிடம் ரகசியமாக சொல்லிருப்பார் போல. இருவரும். பிளானை பக்காவாக செயல்படுத்திவிட்டனர். இம்முறையாவது 'ரமேஷ்ன்னு ஒருத்தர் இருந்தாரே எங்கடா?' எனக் கேட்டார் கமல். இனிமேலாவது விளையாடுவாரா என்பதை வாட்ச் பண்ணுவோம்.
என்னதான் சொல்லுங்க சுரேஷ் தாத்தா இல்லாமல் வீடு நிச்சயம் பொலிவிழக்கும். என்னதான் கொளுத்திப்போட்டாலும், அவை அனைத்தும் ரசிக்கவைக்கும்படியாக இருந்தன. ஆனால், பாலா போன்றவர்களின் ஸ்ட்ராடஜி சலிப்பையும் கடுப்பையும்தான் ஏற்படுத்துகிறது. சுரேஷின் தடத்தை யாராவது பின்பற்றினால் மட்டுமே இந்த சீசன் சுவாரசியமாக இருக்கும். பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"