/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-Promo-Suresh-Chakravarthy.jpg)
Bigg Boss 4 Tamil Review Day 13: 'என்ன கெட் அப் இது!' அப்படிதான் இருந்தது கமலுடைய நேற்றைய காஸ்டியூம். 'உள்ளேயும் முகமூடி அவிழ ஆரம்பிச்சுடுச்சு' எனக் கமல் போட்டிருந்த முகமூடியை அவிழ்த்தபடி ஆரம்பமானது நேற்றைய பிக் பாஸ். 'க்ரூப்பிஸம்' பற்றி ஆரம்பித்து அரசியலை மிக்ஸ் செய்து வழக்கம்போல தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார் கமல்.
'குலேபா..' பாடலோடு பதிமூன்றாம் நாள் எபிசோட் ஒளிபரப்பானது. 'ஏன் காலையில யாரும் ஒழுங்கா டான்ஸ் ஆடமாட்டிங்குறீங்க? அதனால் உங்களுக்கு லட்ஜுரி பட்ஜெட்ல பாயிண்ட்ஸ் கட்' என்ற பிக் பாஸின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனைவரும் தங்களின் நடன திறமையை மிகவும் 'ஆக்டிவாக' வெளிப்படுத்தினர் (அட சத்தியமா!). 'மத்தி மீன் மத்தி மீன்' என மீனுக்குட்டி (ரேகாதான்) துள்ளி குதிப்பதை கண்ட ஹவுஸ்சமேட்ஸ் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். எப்படியும் இந்த வாரம் ரேகா வெளியேறிவிடுவார், பொழச்சி போகட்டும் என நினைத்திருப்பாரோ என்னவோ, ரேகா கேட்ட மீனை வழங்கிவிட்டார் பிக் பாஸ்!
இந்த பாலா-சனம் சண்டை முடியல (நமக்கும்தான்). பாலாவின் 'ஆட்டிடியூட்' நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு பாலாவும் என்னென்னவோ செய்துப பார்ர்கிறார். எதுவும் வேளைக்கு ஆகல. என்ன செய்ய, அவருடைய எந்த சண்டையிலும் சுவாரசியம் இல்லையே. 'லவ் ட்ராக்' எல்லாம் போட்டு ட்ரை செய்கிறார் பிக் பாஸ். அதற்கும் பாலா சரிப்பட்டு வர மாதிரி தெரியல. என்னம்மா இப்படி பண்ணுறியேமா!
Bigg Boss 4 Tamil reviewவெவ்வேறு விலங்கு மற்றும் மற்ற உயிரினங்களுடைய படங்கள் அச்சடிக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் நாணயம் கொடுத்து, வாராவாரம் நாணயத்தைச் சேமித்து வரவேண்டும் என்பது டாஸ்க் (என்னது இது சின்னபுள்ளத்தனமா!). இதற்கான உண்டியல்கள் வந்ததும், அவசரமாக ரேகா முதலில் சென்று "எனக்கு மீன் உண்டியல்" என்று எடுத்துக்கொண்டார். 'நாமினேஷனுக்கு மட்டும் யாரும் இப்படி வந்துடாதீங்க' என்று நம் மனக்குரலை ஆரி கூறினார்.
'சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு' என்றுகூறி அனிதா சிங்கம் உண்டியலையும், 'மேல மேல மேல பார்க்கணும்' என்று பட்டாம்பூச்சி உண்டியலை ரம்யாவும், குரங்குபோல் சேட்டைபண்ணியபடி குரங்கு உண்டியலை சோம் சேகரும், 'மெதுவா வந்தாலும் வெற்றிபெறும்' என்றுகூறி ஆமை உண்டியலை சனம் ஷெட்டியும், 'தேவைப்படும் நேரத்தில் விஷத்தைக் கக்கும் கோப்ரா பாம்புடா நான்' எனக்கூறி பாம்பு உண்டியலை ரியோவும் எனக் கலகலப்பாக நிறைவடைந்தது இந்த டாஸ்க்.
அடுத்து அகம் டிவி வழியே கமலின் என்ட்ரி. முன்பு இருந்த சீசனைபோல், 'நாம் எலிமினேட் ஆகிவிடுவோமோ' என்கிற பதற்றம் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சனம் ஷெட்டி மட்டுமே அவ்வப்போது தன் கவலையை வெளிப்படுத்துகிறார். சண்டையிலிருந்து கவலைகள் வரை இந்த சீசனில் எல்லா எமோஷன்ஸுடைய அளவுகளும் கம்மியாகவே இருக்கிறது. (வெரி பேட்!)
Bigg boss 4 Tamil Velmuruganநாம் ஏற்கெனவே சொன்னதுபோல, ரியோவின் ஓவர்-ரியாக்டிங் பற்றி கமல் எடுத்துரைத்தார். ஆனால், 'நான் அப்படியெல்லாம் பண்ணலையே!' என்று பிரேக்கில் ரியோ தன் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்தவருக்கு 'குறும்படம்' போட்டுக்காட்டினால்தான் புரியும்போல. என்றாலும், ஒரேநாளில் வெடித்த விஷயமல்ல, அதற்கு முன்பே சுரேஷ் மீது தான் கோபமாக இருந்ததாதல்தான் அன்றைக்கு 'ட்ரிகர்' ஆகிவிட்டதாக ஒப்புக்கொண்டதற்காக ரியோவைப் பாராட்டலாம்.
'கொளுத்திப்போடணும்னு முடிவு பண்ணே ஆனா, என்ன வெடினுதான் தெரில' என்று தன்னுடைய பாணியிலேயே, ஃப்ரீ பாஸ் டாஸ்க் பற்றி சுரேஷ் கூறிய விதம் 'வேற லெவல் பாஸ் நீங்க!'. ஊரே பத்தி கிட்டு எரியுது, அப்போ உக்கார்ந்து சாப்பிடறதெல்லாம்..' என 'கொளுத்திப் போடும் பரட்டையைப் பார்த்து கமல் சொன்ன கவுன்டர் 'பெர்ஃபெக்ட்'. என்றாலும் அந்த வேட்டி விஷயத்தில் இன்னும் குழப்பம் தீர்ந்த படியில்லை. 'இப்படி சொல்லுங்க அப்படி சொல்லுங்க' என ரியோ, ஆரியின் அட்வைஸ் வேல்முருகனுக்குப் புரிந்ததா என்பதுகூட தெரியவில்லை. இவ்வளவு அப்பாவியா இருக்கிறாரே!
Bigg Boss 4 Tamil Archanaஅடுத்ததாக அர்ச்சனா மற்ற ஹவுஸ்சமேட்ஸுக்கு கொடுத்த பட்டங்கள் பற்றி விவாதித்தனர். "'மக்கள் பிரதிநிதி' என்ற என்னுடைய பட்டத்தை நீங்கள் எடுத்துக்கொண்டீர்களே" என்று கமல் அர்ச்சனாவைப் பார்த்து கேட்ட 'பன்ச்'சோடுதான் ஆரம்பமானது இந்த நிகழ்வு. ரியோ மற்றும் ரம்யாவிற்கு கொடுக்கப்பட்ட சவாலான போட்டியாளர்கள் விருதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'இங்கு தவறு செய்துவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று ஒளிந்துகொண்டு முடிந்தால் என்னைப் பிடி' என்று சவால் விடுவது உண்மையான சவாலே அல்ல. அதுக்கு பேரு திருட்டு' என்றதும், ரம்யாவின் ரியாக்ஷன்.. ஹய்யோ ஹய்யோ!
நம் நாட்டிலும் ஷோகேஸ் பொம்மைகள் இருந்திருக்கிறார்கள்... என்னது இருக்கிறார்களா? என்றபடி ஆடியன்ஸை கைகாட்டி எஸ்கேப் ஆனார் கமல். வரவர இது பிக் பாஸ் ஷோ என்கிற நினைப்பே வர மாட்டீங்குது! அறிவுரை கேட்காதவனுக்கு அறிவுரை சொல்லக்கூடாது என்று 'அட்வைஸ் ஆரி'க்கே அட்வைஸ் செய்தார் கமல். ஆஜீத், ஷிவானி, கேபி, பாலா என இந்த சீசனில் ஏராளமான சிறுவண்டுகள் இருப்பதனால், பெரியவர்கள் அதிகம் திணறுகிறார்கள். இவங்ககூட என்னடா போட்டிபோடுறது என்கிற மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருப்பதை சொல்லாமல் சொல்லிக்காட்டினார் கமல்.
Bigg Boss Tamil 4 Gabriellaஆஜீத், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டனர் என்ற குறிப்போடு நேற்றைய தினம் முடிந்தது. வீட்டை விட்டு முதலில் வெளியேறப்போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும். நம் கணிப்பில் ரேகாதான் இன்றுவரை இருக்கிறார். உங்களுடைய கெஸ் என்ன?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us