scorecardresearch

‘ஆமா சாமி’ ரமேஷ், ‘நமத்துப்போன பட்டாசு’ ஆரி – அர்ச்சனாவின் விருதுகள் சரிதானா!

போட்டியாளர்களுக்கு அர்ச்சனா கொடுத்த விருதுகள் சரியானதுதானா? ரேகாவிற்கு கொடுக்கும் மொமென்ட்டை கட் செய்துவிட்டாரா பிக் பாஸ்? வாங்க ஆலோசிக்கலாம்!

Bigg Boss Tamil 4 review, Bigg Boss Archana
Bigg Boss 4 Tamil Archana

Bigg Boss 4 Tamil Review Day 11: தீமைதான் வெல்லும்.. என்ற பாடலோடு என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவின் அனல் பறக்கும் வருகையால் சுரேஷ், சனம், அனிதா, ரியோ உள்ளிட்ட ‘அட்டேன்க்ஷன் சீக்கர்ஸ்’ இருக்கிற இடம் தெரியாமல் மறைந்துபோனார்கள். அதெல்லாம் இருக்கட்டும், போட்டியாளர்களுக்கு அர்ச்சனா கொடுத்த விருதுகள் சரியானதுதானா? ரேகாவிற்கு கொடுக்கும் மொமென்ட்டை கட் செய்துவிட்டாரா பிக் பாஸ்? வாங்க ஆலோசிக்கலாம்!

‘வாத்தி ரைடு..’ பாடலோடு ஆரம்பமானது பதினோராவது நாள். அது அர்ச்சனாவின் ரைடு என்பது சிறிது நேரம் கழித்துத்தான் தெரிந்தது. ஆனாலும், அனிதா, ரம்யா பாண்டியனின் காஸ்டியூம் எல்லாம் பத்தாம் நாள் ஒளிபரப்பப்பட்ட உடைகளாகவே இருந்தன. எடிட்டிங்கில் சின்ன மிஸ்டேக் ஆகிடுச்சோ! பார்த்து பிக் பாஸ், இனிமேலாச்சு மண்டை மேல் இருக்கிற கொண்டையை மறந்துடாதீங்க. அப்புறம் உங்களையும் மீம் கன்டெண்ட்டாக்கிடுவாங்க நம்ம பசங்க! ஏன்னா, இங்க இருக்கிறவங்க எல்லோரும் ‘வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோஸ்!

சரி நம்ம கதைக்கு வருவோம். நேற்றைய ஆடல் பாடல் நிகழ்ச்சி ரமேஷின் ‘ஆ முதல் ஃ தானடா..’ பாடலோடு தொடங்கியது. இதற்கு ரமேஷின் ஜோடி ரேகா. (எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணின பாட்டுக்கு, இப்படியொரு நிலைமையா! ஹ்ம்ம்)

bigg boss tamil rekha bigg boss rekha daughter bigg boss season 4
Bigg Boss 4 Tamil Rekha

பிரபு தேவா, காஜோலைபோல் சோம் மற்றும் சம்யுக்தா, ‘வெண்ணிலவே வெண்ணிலவே..’ பாடலுக்கு நடனமாடினர். எம்.ஆர்.ராதாவின் ‘மாமா மாமா..’ பாடலுக்கு ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் ஆடினார்கள். ‘4 மணி ஷிவானியைப் பார்த்து நாளாகிறது. எங்க தலைவியைச் சீக்கிரம் களமிறக்குங்கடா’ என்ற ரசிகர்களின் மனக்குமுறல்களைப் புரிந்துகொண்ட பிக் பாஸ், ஷிவானி நடனமாடிப் பிரபலமான, ‘செல்லமா செல்லமா..’ பாடலை ஒளிபரப்பினார். ஆனால், பாலாவும் சேர்ந்து ஆடியதைத்தான் பார்க்கமுடியவில்லை. கெமிஸ்ட்ரி சுத்தமாக செட்டாகவில்லை என்றாலும், ரொம்ப நாள் மிஸ் பண்ணுன ஷிவானியை பார்க்க முடிந்தது.

ஆடலும் பாடலும் ஓவர். அடுத்து என்ன அர்ச்சனாவின் ‘கொளுத்திப் போடும்’ டாஸ்க்தான். வீட்டிற்குள் நுழைந்ததுமே ஆரம்பமாகிவிட்டது அர்ச்சனாவின் ‘கவுன்ட்டர்’ காமெடிகள். (அவை காமெடியாக இருக்கும் வரை மட்டுமே சேஃப்). ‘எப்போடா போ’ஹ’லாம்னு இருக்கு’ என மறைமுகமாக சுரேஷ் சொன்னதற்கு, ‘நாங்களும் அதுக்குதான் சார் வெயிட்டிங், போயிட்டு வந்துடுங்க’ என்று அர்ச்சனா கூறியதற்கு சுரேஷின் திணறல்.. ஹய்யோ ஹய்யோ! ஆனால், இதன்பிறகு சுரேஷ் காணாமல் போய்விட்டார்.

அடுத்ததாக விருதுகள் வழங்கும் நிகழ்வு. ‘சூப்பர்’ மாடல் பாலாவிற்கு ‘நோ கமென்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்’ விருது வழங்குவதோடு ஆரம்பமானது இந்த நிகழ்ச்சி. ஏற்கெனவே ரேகாவின் கழுத்திலும் அதே ‘நோ கமென்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்’ விருது பலகை இருந்தது. ஆனால், ஏன் அந்த மகுடம் சூட்டும் மொமென்ட்டை நமக்குக் காட்டவில்லை என்பது தெரியவில்லை. ‘மரியாதை’ காரணமாகக்கூட இருக்கலாம். அட!

ரியோ மற்றும் ரம்யா பாண்டியனுக்கு ‘சவாலான போட்டியாளர்’ விருது. இன்னும் போட்டியே ஆரம்பிக்கலையே அதுக்குள்ள இந்த குறிப்பிட்ட விருதைப் பரிந்துரைத்திருக்கவே கூடாது பிக் பாஸ். இருவரும் விஜய் டிவி தயாரிப்புகள் வேறு!

Vijay tv Bigg Boss 4 Tamil Rio Raj review day 8
Vijay tv Bigg Boss 4 Tamil Rio Raj

அடுத்ததாக ‘ஷோகேஸ் பொம்மை’ விருது, சோம் மற்றும் சம்யுக்தாவிற்கு. இவர்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கு இந்த விருது சரியாகப் பொருந்தும். ஷிவானி மற்றும் வேல்முருகனுக்கு ‘அட்மோஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்’ விருது. இதற்கும் ஷோகேஸ் பொம்மைக்கும் என்ன வித்தியாசம்! பேர் வைக்கிறதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா பிக் பாஸ். சனம் மற்றும் ஆரிக்கு ‘நமத்துப்போன பட்டாசு’ விருது. படபடவென பொரிந்து, பின் புரிந்து சமாதானம் பேசுவார் சனம். அவருக்கு இந்த விருது சரியானதுதான். ஆனால், ஆரிக்கு இது பொருத்தமில்லாத விருது.

‘காணவில்லை’ விருது ஆஜீத் மற்றும் கேபிக்கு. தனக்குப் பிடித்தவர்களிடம் கேபி நன்றாகத்தான் பேசுகிறார். ஆஜீத், கேபி மற்றயும் ஷிவானிக்கு தடையாக இருப்பது அவர்களுடைய வயதுதான். இந்தத் தயக்கத்தை உடைப்பது அவரவர்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், ரம்யா பாண்டியன் இல்லையென்றால் நிச்சயம் ஆஜீத் காணாமலே போயிருப்பார்.

நிஷா மற்றும் ரமேஷுக்கு ‘ஆமா சாமி’ விருது. தன் கருத்தை முன்வைப்பதில் ரமேஷ் என்றைக்கும் யோசித்ததே இல்லை. மனதில் தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்லுபவர். அவருக்கு இந்த விருது பொருத்தமில்லாதது.  ரியோவைச்சுற்றி மட்டுமே தற்போது நிஷா சுற்றிக்கொண்டிருக்கிறார். ‘ரியோவுக்கு மட்டும் ஆமா சாமி போடும் விருது’ நிஷாவிற்குச் சரியாக இருந்திருக்கும்.

இறுதியாக ‘பிக் பாஸ் ட்ரெண்டிங்’ விருது. இந்த விருது மட்டுமே இருவருக்கும் சரியானதாக இருந்தது. சுரேஷ் மற்றும் அனிதா இல்லாத ப்ரோமோவே இல்லை போன்ற எண்ணத்தைக் கொடுத்தனர் இருவரும். ஆனாலும், இந்த வாரம் அனிதா இருக்கும் இடம் தெரியாமல்தான் இருக்கிறார். ‘வெளியே என்ன பேசுகிறார்களோ’ என்ற பயம் அனிதாவிடம் அதிகம் இருக்கிறது. இனிமேல் கொஞ்சம் நிதானமாகவே அனிதா இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். சுரேஷ் இதைப் பற்றியும் கவலைப்படுவதுபோல தெரியவில்லை. போட்டியைச் சரியாகப் புரிந்து வீட்டிற்குள் இருக்கும் ஒரே நபர் சுரேஷ் மட்டுமே. இனி அர்ச்சனாவோடு ஆரம்பமாகப்போகும் இந்த இரண்டாம் இன்னிங்ஸில் சுரேஷ் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புதான் அனைவரிடத்திலும் தற்போது உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss 4 tamil review score
Bigg Boss 4 tamil review Anitha and Suresh Chakravarthy

ஆஜீத் மறைத்து வைத்த ஃப்ரீ பாஸை, பாலா எடுத்து வைத்துக்கொண்டு ‘பிராங்க்’ செய்தது, அதனைத் தொடர்ந்து நிஷா மற்றும் ஆரிக்கு வந்த வாக்குவாதம் என நேற்றைய நாள் சிரிப்பு, கொஞ்சம் சண்டை, தெளிவு, குழப்பம் எனக் கலவையாக இருந்தது. எப்போதும் இல்லாமல், நேற்று பிக் பாஸின் ‘எண்டு கார்டு’ வேறு. பிக் பாஸ் சொன்னதைப்போல புது நபரின் வருகையால் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 4 tamil kamal hassan archana review day 11