/tamil-ie/media/media_files/uploads/2020/11/Suchi-Anita-Updated.jpg)
Bigg Boss 4 Tamil Day 41 Review
Bigg Boss 4 Tamil Day 41 Review : எவிக்ஷன் இருக்கும்போதே நம் சீசன் 4 போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுக்க மாட்டார்கள். இதில் இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு யாரும் வெளியேறப்போவதில்லை என்ற அறிவிப்பு வேறு. கேட்கவே வேண்டாம். 'இதெல்லாம் பாவம் மை சன்' ரேஞ்சில் பிக் பாஸை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். சுவாரசியம் கூடுமென சீசன் ஆரம்பத்திலேயே இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரீஸ். இப்போதுவரை 'சுவாரசியம் என்ன விலை' போக்கில் உள்ளது வீடு. நாற்பது நாள்களைக் கடந்துவிட்ட போதிலும், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த சீசன் எதைநோக்கி பயணிக்கிறது என்பதில் குழப்பம் நிலவியபடியே இருக்கிறது. ஒருவேளை எல்லோரையும் ஒரே நேரத்தில் வெளியேற்றிவிடுவார்களோ!
இந்த வாரம், ஸ்பான்சர்களின் வாரம். முன்னாள் போட்டியாளர்களின் வரவு,பாடி சொல்லைத் தட்டாதே, விற்பனையாளர்கள் என ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஸ்பான்சர்களின் தாராள மனதைப் பார்க்க முடிந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. பிக் பாஸ் வெற்றியாளர்களுக்கான ஒட்டு மொத்தத் தொகையையும் இப்படி டாஸ்க் வைத்தே கரைக்கலாம் என பிபி முடிவு செய்துவிட்டாரோ!
'இந்த வாரம் மட்டும் நாமினேஷனில் அனிதா இருந்திருந்தால் நிச்சயம் எவிக்ட் ஆகியிருப்பர்.. ச்சே! மிஸ் ஆகிடுச்சு' என சோஷியல் மீடியாவில் மக்களின் குமுறல்களை நன்றாகவே காண முடிகிறது. நூலிழையில் எஸ்கேப் ஆகி வருகிறார். பீ கேர்ஃபுல் (நம்மைத்தான் சொல்லிக்கணும்).
Bigg Boss 4 Tamil Vijay Tvபாலாவை வைத்து ஷிவானி கேபிக்குள்தான் சண்டை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தால், திடீரென முளைத்த காளான் போல சுச்சியால்தான் சண்டை ஏற்படும் போல. பாலா என்றால் சுச்சிக்கு கண்கள் விரிகின்றன. முத்தங்களும் அவ்வப்போது பறக்கின்றன (என்னடா நடக்குது இங்க!). நிச்சயம் லவ் டிராக் இல்லை. சுச்சி செய்வது அனைவரையும் (நம்மையும்தான்) வெறுப்பேற்றுகிறதே தவிர சுவாரசியமாக இல்லை. வெளியில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுச் சென்றவர் ஏன் இவ்வளவு மோசமாக கேம் ஆடுகிறார் என்பது தெரியவில்லை. அனிதாவிற்கு அடுத்தபடியாக மக்களின் 'கெட் அவுட்' லிஸ்ட்டில் ரெடியாக இருக்கிறார்.
இவை ஒருபுறம் இருக்க, நேற்றைய எபிசோடில் கமல் மட்டுமே ஒட்டுமொத்த ஷோவையும் கட்டுக்குள் வைத்திருந்தார். வழக்கமான 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' எனத் தீபாவளியின் நாள், நிறைவான தினமாக இருந்தது. முன்பைவிட அர்ச்சனா இப்போது மிகவும் சாந்தமாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். தற்போது அவரிடம் டாமினேட்டிங் ஆட்டிடியூட் இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றைய கமலின் எபிசோடில் வீட்டில் இருப்பவர்களைப்போல் ரியோவோடு சேர்ந்து அர்ச்சனா இமிடேட் செய்தது அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது. மேலும், கேபி, நிஷாவின் பெர்ஃபாமன்ஸுகளும் அடி தூள்!
தீபாவளியையொட்டி கலகலவென நகர்ந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் நாள்கள் இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us