Bigg Boss 4 Tamil Review Day 10: ‘பத்தவெச்சுட்டியே பரட்டை’ என ஒரு பரட்டையே சொல்கிறதே.. அடடே…! என்பது போல்தான் இருந்தது நேற்றைய எபிசோட். அதிலும் அனைத்தும் ஸ்க்ரிப்டெட் கன்டென்ட் போலவே தோன்றியது. சுரேஷ் நல்லா பண்ணுறாரோ இல்லையோ ஏம்மா ரம்யா நீ ரொம்ப நல்லா பண்ணுறம்மா. சரி வாங்க எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் நாளில் நடந்தவற்றைப் பார்ப்போம்.
‘கிளாமருமா நீ..’ பாடலோடு ஆரம்பமான பத்தாம் நாள், அவங்கவங்க சாப்பிட்ட தட்டை அவங்களே கழுவி வெச்சிடுங்க என்ற குறிப்போடு நகர்ந்தது. ஆஜீத்துக்கும் சுரேஷுக்கும் சிறிய சண்டை வர, கொஞ்ச நேரத்திலேயே ‘பெரியவர்’ என்ற மரியாதையில் ஆஜீத் சுரேஷிடம் மன்னிப்பு கேட்ட பக்குவம், அருமை. நாமினேஷனில் உள்ளவர்களுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் அறிவிப்பு வந்தவுடன், முந்தைய நாள் எலியும் பூனையுமாகச் சண்டைபோட்டுக்கொண்ட ஆரி மற்றும் ஆஜீத், இணைந்து பேசிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அஜீத்துக்கு ‘தைரியம்’ சொல்லி அனுப்பிய விதம், சிறப்பு. (இந்தப் பசங்களே இப்படிதான் எஜமான்).
பிறகு என்ன, நாம் அனைவரும் ஆவலோடு காத்திருந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் ஆரம்பமானது. இம்முறை அனைத்து போட்டியாளர்களும் ‘எமோஷ்னல்லி வீக்’ என்றே தோன்றுகிறது. குரலை உயர்த்தி மட்டும் பேசுகிறார்களே தவிர, செயலில் இறங்க யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மற்ற சீசனிலிருந்து கற்றுக்கொண்ட ஸ்ட்ராட்டஜியாகக்கூட இருக்கலாம். இதுதான் ஸ்ட்ராட்டஜி என்று சொல்லாமல், சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகாவை வெளியே அனுப்பிவிட்டு அடுத்து கேபியை வெளியேற்றுவதற்கு தரான வேளையில் லைட்டாக மாட்டிக்கொண்டார் சுரேஷ்.
‘அடடா! இந்தப் பொண்ணுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. இனிமே கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்’ என்ற உள்ளுணர்வு சுரேஷ் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. என்றாலும், கேபி வெளியேறினார். இப்போதுதான் ஆரம்பமானது பரட்டையின் விளையாட்டு. சுரேஷ், ரம்யா, ஆஜீத் உள்ளிருக்க, ‘நீங்கச் சொன்ன வரிசைப்படி உங்கப் பேரு எப்போ வரும்’ என ரம்யா கேட்க (ரொம்ப சீக்கிரமா), வெளியில் இருக்கும் மற்ற ஹவுஸ் மேட்ஸுக்கு ‘படம்’ காட்டத் தொடங்கினார் பிக் பாஸ்.
அனிதா தொடங்கி வேல்முருகனுக்கு வேஷ்டி கொடுத்தது வரை அனைத்தையும் சொல்லிக்காட்டி, பரிதாப வாக்கு பெறப் பார்த்தவரின்மேல் கோபாவம்தான் வந்தது. இதனை அவ்வளவு தெளிவாக அனைவர்க்கும் லைவாகக் காட்டி பதம் பார்த்த பிக் பாஸ் வேற லெவல். ஆனால், ‘அது ஏன் சுரேஷ் பேசுவதை மட்டும் தெளிவாகப் போட்டுக்காட்டவேண்டும்?’, ‘சுரேஷை அவ்வளவு நேர விளக்கம் சொல்லும்படி சொன்னது பிக் பாஸ்தானே?’ உள்ளிட்ட கேள்விகள் எழாமலில்லை.
இதெல்லாம் விட ரம்யா பாண்டியனின் ஸ்ட்ராட்டஜிதான் ‘ஆஹா’ லெவல். தன்னுடைய பெயர் அந்த லிஸ்ட்டில் கடைசியாகத்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாக அறிந்திருந்த ரம்யா, தன் வாய்ப்பு வரும் வரை காத்திருந்து (அதற்குள் அனைவரும் அவுட் ஆகிவிட), பிளானை பக்காவாக செயல்படுத்தி, இறுதியில் அஜீத்திற்கு விட்டும் கொடுத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவர்ந்துவிட்டார். சபாஷ் ரம்யா!
என்ன இருந்தாலும், வேல்முருகனுக்கு அன்போடு கொடுத்ததாக நினைத்ததைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆரம்பத்திலிருந்தே வார்த்தைகளில் கவனமில்லாமல் இருப்பவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதனைத் திருத்திக்கொள்வதுதானே சரி.
அஜீத்திற்கு ஃப்ரீ பாஸ் கிடைத்தது சரியா? உங்கள் கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss 4 tamil kamal hassan ramya pandian suresh review day
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை