ஃப்ரெண்ட்லி எமோஷன்ஸ் மட்டும்தானா பாலா? குறும்புக்கார பிக் பாஸ் கேம்

‘நய் நய்’ எனப் பேசிக்கொண்டிருப்பவர்களின் கைகளில் ‘நெய்’ கொடுத்து புதுமையாக ஏதாவது ‘செய் செய்’ என்று உத்தரவிட்டார் பிபி.

Bigg Boss 4 Tamil Vijay tv Bala Sanam Archana Rio Review Day 24
Bigg Boss 4 Tamil Review Day 32

Bigg Boss 4 Tamil Review Day 32: ‘நீங்க மட்டும்தான் ‘தறுதலை’க்கு பிரச்சனை பண்ணுவீங்களா. நானும் பண்ணுவேன் பாருங்க’ என்று நினைத்திருப்பாரோ என்னவோ, 32-ம் நாள் ‘ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே..’ பாடலை ஒளிபரப்பினார் பிக் பாஸ். ‘நான் பார்த்த ஒருதலை நீதானே.. உன்னால ‘தறுதலை’ ஆனேனே..’ வரிகள் இந்தப் பாட்டில் வருமே! குசும்புக்கார பிக் பாஸா இருக்காரு. மொத்தமா கன்டென்ட் கொடுத்தாச்சு, பிக் பாஸ் வீட்டுக்கும் சண்டைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் இருந்தது நேற்றைய எபிசோட்.

நேற்றைய ஸ்டார் அர்ச்சனா என்றுதான் சொல்லவேண்டும். சுண்டல் விற்பதோ, ரேடியோ ஜாக்கியோ அப்படியே கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். வீட்டை விட்டு வெளியேறியதும் யாருக்கு சினிமா வாய்ப்பு இருக்கோ இல்லையோ ஒரு நல்ல ‘அம்மா’ ரோலுக்கு அர்ச்சனாவுக்கு வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன. சுண்டல் விற்கும் டாஸ்க்கில், பீச்சில் இருக்கும் ஆயாகூட தோற்றுப்போய்விடும். அந்த அளவிற்கு ‘ரியல்’ நடிப்பு.

Bigg Boss 4 Tamil Vijay tv Aajeeth Sanam Suresh Kamal Ramya Bala Review Day 21 
Bigg Boss 4 Tamil Vijay tv Review

பயங்கரமான ரேடியோ ஜாக்கி (நம்ம சூழ்ச்சி சுச்சிதான்) பக்கத்தில் இருக்க, அர்ச்சனாவையும் ஆர்.ஜெ களத்தில் இறக்கிவிட்டார் பிக் பாஸ். அர்ச்சனாவின் நான்-ஸ்டாப் பேச்சால் அரங்கமே மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தது ஒருவரைத் தவிர. வேறு யாரு சச்சிதான். ‘நமக்கே டஃப் கொடுக்குறாளே’ என்பதுபோல் இருந்தது சுச்சியின் ரியாக்ஷன். வழக்கமான அர்ச்சனாவின் பாணியில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் ஒவ்வொருவருடைய அறிமுகமும் ரசிக்கவைக்கும்படியாகவே இருந்தது. சுச்சியின் அந்த பேய் அறைந்த எக்ஸ்ப்ரஷனைப் பார்ப்பதற்காகவே பலர் ரீ-பிளே செய்து பார்த்திருக்கிறார்களாம் (என்ன ஒரு ரசனை!).

ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே மிகப் பெரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால், இருவரும் எளிதில் ‘ட்ரிகர்’ செய்யப்படுகின்றனர். எவ்வளவு சின்ஸியராக சுண்டல் விற்றுக்கொண்டிருக்கிறார் ஆரி. அவரிடம் சுண்டல் வாங்காமல் சம்யுக்தா கேபியுடன் கடலைப் போட்டுக்கொண்டிருந்தால் டென்ஷன் ஆகத்தானே செய்யும். சுண்டலுக்கு அக்கப்போரா!

Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Aari Samyuktha Archana Bala Day 29 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Archana

ஆனாலும், சைடு கேப்பில் ‘தம்பி’ என்று ரம்யா கூறியதும், நெஞ்சே வெடித்துச் சிதறியதுபோல சோம் சேகரின் ரியாக்ஷன்- ‘எங்கே செல்லும் இந்த பாதை’ வரிகள் உங்களுக்குதான் சோம். அடுத்ததாக ரியோ மற்றும் நிஷாவின் வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. என்னடா சம்பந்தமே இல்லாம போயிட்டு இருக்குனு பார்த்தா, எல்லாம் ரியோ க்ரூப்பின் சதி. சுச்சியை ‘நோஸ் கட்’ செய்யணும்னு இப்படி பண்ணோம்னு ஒரே ஜாலியா இருக்காங்களே, இந்த ஜட்ஜ் அம்மா நியாமான தீர்ப்பா கொடுத்துட்டு இருக்காங்க? இதுக்கு போய் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு சந்தோஷப் படுறீங்கோ! பொறுமை பொறுமை… கண்டிப்பா அந்த ஜட்ஜ் அம்மாவுக்கு எதுவுமே புரிஞ்சிருக்காது. அந்த அம்மாவே கைய தூக்குறத வெச்சு தீர்ப்பு எழுதுறாங்க. நீங்க வேற ஏன் ரியோ காமெடி பண்ணிட்டு இருக்கீங்க? ஆனா, உங்க வழக்கில் யாரையும் கையை தூக்க வைக்கலையோ!

எவ்வளவு நாள்தான் மக்களையே என்டெர்டெயின் (ஆஹான்) பண்ணுறது, நமக்கு ஸ்பான்சர் பண்ணுறவங்கள இன்னிக்கு கொஞ்சம் என்டெர்டெயின் பண்ணிடலாம் என்று ஸ்கெட்ச் போட்ட பிக் பாஸ், ‘நய் நய்’ எனப் பேசிக்கொண்டிருப்பவர்களின் கைகளில் ‘நெய்’ கொடுத்து புதுமையாக ஏதாவது ‘செய் செய்’ என்று உத்தரவிட்டார் பிபி. அவர்களும் பொங்கல் போலவும் கேசரி போலவும் ஒன்றைச் செய்துகாட்டினார்கள். இதற்கு நடுவர் சம்யுக்தா. நன்றாகச் சமைக்கக்கூடிய சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் இருக்க, ஏன் சனம் மற்றும் அனிதாவை செஃப் ஆக்கினார் பிக் பாஸ்? பாருங்க அந்தக் குழந்தைகள் தோற்றுப்போய்விட்டார்கள்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Aari Samyuktha Archana Bala Day 29 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Samyuktha

இந்த கூச்சலுக்கு நடுவே சுரேஷ் தாத்தா தனிமையில் புலம்பிக்கொண்டிருந்தார். பின்ன, நீதிமன்றத்தில் ‘இவர் தனியாக நாலு பேரை கூப்பிட்டுப் புலம்புவார்’ அப்படி இப்படி என்று அவரை பேசினால் அவர் மட்டும் என்ன செய்வார். ‘நான் கேமராகூடவே பேசிக்கிறேன்’ என்ற முடிவைத்தான் எடுப்பார். 9 கிரக அமைப்பையும் ஒன்றாகப் பெற்ற இந்த ‘கன்டென்ட் ராஜா’ எப்படியிருந்தாலும் கன்டென்ட் கொடுப்பார்.

அவ்வளவு ருசி ருசியா சமைச்சு சாப்பாடு இருந்தாலும், சம்யுக்தா, அர்ச்சனா கைகளால் தோட்டத்தைக்கூடச் சாப்பிட முடியாது என்று சாப்பாட்டில் தண்ணீர் ஊத்தி சாப்பிடுகிற ரோஷக்கார தாத்தா அவரு. ஹெல்த் பத்திரம்!

எப்போதுமில்லாமல் இந்த சீசனில் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துபவர்களும் நினைத்த நேரத்திற்குத் தூங்குபவர்களும் அதிகம். இதுபத்திலாம் பிபி எதுவுமே கண்டுக்காம இருக்காரே என்று ஏற்கெனவே டிஸ்கஸ் செய்தோம். முப்பது நாள்களுக்குப் பிறகு நேற்றுதான் வார்னிங் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், ஷிவானி பாலாவுக்கு இடையே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு அர்ச்சனாவிடம் விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அது என்ன ‘எந்த ஃபீலிங்கும் இல்லை ஒன்லி ஃப்ரெண்ட்லி எமோஷன்ஸ்?’ புரியல பாலா சுத்தமா புரியல. மகன் பாசத்துல ஏங்கிக்கொண்டிருக்கும் அர்ச்சனாவின் எமோஷன்ஸுக்கு வராத ஒரு எமோஷன் ஷிவானியிடம் மட்டுமா? சரி மக்களே, நீங்க எமோஷனாகிடாதீங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil review archana aari samyuktha bala shivani day 32

Next Story
அனு போட்ட கொலை பழி: எப்படி சரி செய்வாள் ரோஜா?Tamil Serial News, Sun TV-Roja Serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com