Bigg Boss 4 Tamil Vijay Tv Review Day 28 : 'என்னடா கேப்டன்சி டாஸ்க் பற்றியெல்லாம் கமல் சார் பேசாமலேயே போயிட்டாரே! பாலா பண்ணது சரியா?' என்ற கேள்விக்கான பதில் மட்டுமல்ல, பாலாவின் ராஜதந்திரங்களும் நேற்றைய எபிசோடில் வெளிப்பட்டன. வேல்முருகன் எக்சிட் முதல் பலரும் பல நாள்களாகக் காத்திருந்த சுச்சியின் என்ட்ரி வரை (நீங்க எதிர்பாக்குற லீக்ஸ் எல்லாம் இங்கே கிடைக்காது!) 28-ம் நாளின் அட்ராசிட்டிகளை பார்த்துவிடுவோமா!
அது இதுனு பேசாம சட்டுபுட்டுனு கேப்டன்சி டாஸ்க் பற்றிய கேள்விகளைத் தொடுத்தார் கமல். ஏற்கெனவே தனக்கு சோம் சேகரை கேப்டன் ஆக்குவதில் விருப்பமில்லை என்று தன் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டிருந்த பாலா, நேற்று கமல் முன்பும் வெளிப்படையாகக் கூறினார் (எப்படியும் டிவில தெரிஞ்சிருக்கும், எதுக்கு மறைச்சுக்கிட்டு!).
Bigg Boss 4 Tamil Rio, Bala, Archana
சோம் சேகர் ஒரு பொம்மைபோல் மற்றவர்கள் சொல்லுவதைத்தான் செய்வார், அதனால் தனக்கு சோம் கேப்டனாவதில் விருப்பமில்லை என நடுநிலையாகவா பாலா முடிவெடுத்தார்? ரம்யாவிற்கு கொடுக்கப்பட்ட பவரால் நிஷாவை வெட்டிவிட்டு சம்யுக்தாவை தேர்வு செய்தது முதல் தான் சேகரித்து வைத்திருந்த பந்துகளைப் பாலா சம்யுக்தாவிற்குக் கொடுத்தது வரை அனைத்துமே, பாலா சார்ந்திருக்கும் குழுவிலிருந்து ஒரு ஆள் கேப்டன் ஆகவேண்டும் இல்லை இல்லை கேப்டானாக்கிடவேண்டும் என்பதற்காகத்தானே? (என்னாவா பிளான் பண்ணுறாய்ங்க!). ஆனாலும், அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் சாதித்துக்கொண்டு இருக்கிறார் சாம்.
இவ்வளவு நடக்கும்போதும், தனக்காக எதுவுமே பேசாமல், 'அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை' என்று இரண்டே வார்த்தையில் முடித்து அமைதியாக அமர்ந்துவிட்டார் சோம் (இப்பொழுதாவது பேசலாமே சேகரு?). ஆனால், யாருடைய முடிவிலும் யாரும் தலையிடவில்லை என சோம் இடத்தில் நின்று ரியோ பல பாயின்ட்டுகளை முன்வைத்தார். கூடவே அர்ச்சனாவும்தான். சும்மா விடுவாரா தம்பி பாலா. அர்ச்சனா, ரியோ, நிஷா எல்லோரும் ஒரு க்ரூப் என்று பட்டென போட்டுடைத்தார். (ஹய்யோ ஹய்யோ! ஆரி கூறிய குரூப்பிஸம் இப்போ ஒடைஞ்சிடுச்சுல்ல!).
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari and Vel
பின்னாடியே சனம், ரம்யாவும் கை தூக்க, தன்னுள் இருந்த பல விஷயங்களைப் போட்டுடைத்தார் சனம். அட! என்று அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்க, நமக்கு ஸ்கோர் பண்ண இதுதான் சரியான டைம் என நினைத்த ஆரி, 'அது என்ன சார், நல்லா பேசுறவங்களோட குறைகளை மறக்குறது, குறைவா பேசுறவங்களோட குறைகளை பெருசா பார்க்குறது? சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு!' என்றார் (வெல் டன் ஆரி, வெல் டன்!). பதிலுக்கு 'இப்போ என்ன சொல்லுறது' ரேஞ்சில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அமைதியானார்கள். நாளைக்கு நாமினேஷன் இருக்கு ஆரி ப்ரோ. தயாரா இருங்க!
அடுத்ததாக அனிதா கொடுத்த நீண்டநேர உரை பற்றிப் பேசத்தொடங்கினார் கமல். அன்றைய நாளில் அனிதாவிடம் 'சீக்கிரம் முடிமா..' என்றுகேட்டுக்கொண்ட சம்யுக்தா நேற்று 'சாரிடா' என்றுகூறி அமர, இதற்கெல்லாம் ரிப்பன் கட் பண்ணிய ரம்யாவை நோக்கிப் பாய்ந்தது கேள்வி அம்பு. வழக்கம்போல 'சிரித்துச் சிரித்து.. சிரிப்பாலேயே' பதிலைச் சொன்னார் ரம்யா. என்றைக்கு இந்தச் சிரிப்புக்கும் டிப்ளமசிக்கும் ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. 'நீ பேசுறதுலாம் சரிதான் ஆனா, பாயின்ட்டை நச்சுனு சொல்லிட்டு விட்ருமா' என்றுகூறி இந்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் கமல். (ஓஹோ அப்போ ரம்யாதான் அந்த பிளாக் ஷீப்ப்பா.. இருக்கட்டும் இருக்கட்டும் என்பது அனிதாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்ம்ம்.. )
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Pandian
ஆனாலும், 'ஆஜீத் சேவ்டு' என்று தெரிந்ததும் பாலாவின் வேகம் வேல்முருகனுக்கு சோகம்! ஒருமுறை வேமுருகனிடம், 'சனம் உங்களைக் காப்பாற்றிவிடுவார்' என்று பாலா கூறியது நினைவிருக்கிறதா மக்களே? ஆனால், அதற்கு நேர்மாறாக ஆனது நேற்றைய எவிக்ஷன். சனம் ஷெட்டியின் பல நல்ல பக்கத்தை பிக் பாஸ் வேண்டுமென்றே கட் செய்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது. 'பாடிட்டு போ வேலு' என்று அர்ச்சனா சொல்வதற்கு இணங்க, இறுதியாக 'ஒத்த சொல்லால..' பாடலைப் பாடினார் வேல்முருகன். இருப்பதைப் பகிர்ந்தே பழக்கப்பட்டவருக்கு, தன்னிடம் இருக்கும் நாணயத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பது தெரியவில்லை. (நல்ல மனிதர்). தான் யார் என்பதைச் சொல்லாமலே கிளம்பிவிட்டார் வேல்முருகன். இருப்பினும் வாழ்த்துகள்! நல்லாயிருங்க!
வேல்முருகன் வெளியேறிய கையோடு, 'குட்டி பிசாசு' (பாடலோடு) சுச்சித்ராவின் என்ட்ரி இருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும், அதே மகுடம் சூட்டும் விழா. இதைப்பற்றி பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. என்றாலும், இவ்வளவு நாள் வரை 'தான் டாமினேட் செய்துகொண்டிருக்கிறோமா' என்ற அர்ச்சனாவின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கும். ஆனால், சுச்சி வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து யாருடைய முகத்திலும் மலர்ச்சி இல்லை. அனைவரும் பேய் அரைந்ததுபோலத்தான் இருந்தனர். சுச்சியின் வரவு நிச்சயம் பல மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்பலாம் (நம்பிக்கைதான் வாழ்க்கை!). பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"